www.garudabazaar.com

கௌதம் கார்த்திக்குடன் டும் டும் டும்.. மணக்கோலத்தில் மஞ்சிமா மோகன் ! 😍 TRENDING

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கௌதம் கார்த்திக் & மஞ்சிமா மோகன் திருமண புகைப்படங்கள் டிரெண்ட் ஆகி வருகின்றன.

Manjima Mohan Gautam Karthik Wedding Function

கடல் (2012) திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகராக அறிமுகமானவர்,  நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக். அதனைத் தொடர்ந்து 'ரங்கூன்', 'முத்துராமலிங்கம்', 'தேவராட்டம்' போன்ற பல படங்களில் கௌதம் கார்த்திக் நடித்துள்ளார். தற்போது 1947, பத்து தல படங்களில் நடித்து வருகிறார்.

அதேபோல கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த  'அச்சம் என்பது மடமையடா' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை மஞ்சிமா மோகன். இதனைத் தொடர்ந்து தமிழில் கௌதம் கார்த்திக் உடன் இவர் இணைந்து 'தேவராட்டம்', விஷ்ணு விஷாலின் 'எஃப்ஐஆர்' மற்றும் விஜய் சேதுபதியுடன் 'துக்ளக் தர்பார்' படங்களில் நடித்துள்ளார்.

Manjima Mohan Gautam Karthik Wedding Function

சில நாட்களுக்கு முன் நடிகர் கௌதம் கார்த்திக் & மஞ்சிமா மோகன் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டனர். மேலும் தாங்கள் காதலிப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

நடிகை மஞ்சிமா மோகன் & நடிகர் கௌதம் கார்த்திக் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது தங்களது திருமணம் சென்னையில் குடும்பத்தினர் முன்னிலையில் தனியார் நிகழ்வாக நடைபெறும் என்று கூறினர். மேலும் நவம்பர் 28 ஆம் தேதி திருமணம் நடைபெறும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

Manjima Mohan Gautam Karthik Wedding Function

இந்நிலையில் நடிகர் கௌதம் கார்த்திக் & மஞ்சிமா மோகன் திருமணம் சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. நெருங்கிய உறவினர் மற்றும் நண்பர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

மேலும் திருமண புகைப்படங்களை தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். பட்டு வேட்டி சட்டையில் மணமகன் கௌதம் கார்த்திக் & பட்டுப் புடவை அணிந்து காட்சியளிக்கிறார்கள். "இப்பொழுதும் எப்பொழுதும்" என தலைப்பிட்டு புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர் ‌

தொடர்புடைய இணைப்புகள்

Manjima Mohan Gautam Karthik Wedding Function

People looking for online information on Gauham Manjima Wedding, Gautham Karthik, Manjima Mohan will find this news story useful.