www.garudabazaar.com

Gowtham Karthik Manjima Mohan Wedding : கௌதம் & மஞ்சிமா.. தாலி கட்டி உச்சி முகர்ந்த தருணம்! TRENDING PHOTOS

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கௌதம் கார்த்திக் & மஞ்சிமா மோகன் திருமணம் மூன்று தினங்களுக்கு முன் சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.

Gowtham Karthik Manjima Mohan Wedding Moments

Also Read | "காமெடியன்ஸ்லாம் கொஞ்சம் தள்ளிப் போங்க".. நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் கலக்கல் டிரெய்லர்!

கடல் (2012) திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகராக அறிமுகமானவர்,  நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக். அதனைத் தொடர்ந்து 'ரங்கூன்', 'முத்துராமலிங்கம்', 'தேவராட்டம்' போன்ற பல படங்களில் கௌதம் கார்த்திக் நடித்துள்ளார். தற்போது 1947, பத்து தல படங்களில் நடித்து வருகிறார்.

அதேபோல கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த  'அச்சம் என்பது மடமையடா' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை மஞ்சிமா மோகன். இதனைத் தொடர்ந்து தமிழில் கௌதம் கார்த்திக் உடன் இவர் இணைந்து 'தேவராட்டம்', விஷ்ணு விஷாலின் 'எஃப்ஐஆர்' மற்றும் விஜய் சேதுபதியுடன் 'துக்ளக் தர்பார்' படங்களில் நடித்துள்ளார்.

Gowtham Karthik Manjima Mohan Wedding Moments

சில நாட்களுக்கு முன் நடிகர் கௌதம் கார்த்திக் & மஞ்சிமா மோகன் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டனர். மேலும் தாங்கள் காதலிப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

Gowtham Karthik Manjima Mohan Wedding Moments

நவ.28 ஆம் தேதி சென்னையில் குடும்பத்தினர் முன்னிலையில் தனியார் நிகழ்வாக மஞ்சிமா மோகன் & கௌதம் கார்த்திக் திருமணம் நடைபெற்றது.  நெருங்கிய உறவினர் மற்றும் நண்பர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

Gowtham Karthik Manjima Mohan Wedding Moments

இவர்களின் திருமண புகைப்படங்கள் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வாழ்த்துகளையும் பெற்றன.

Gowtham Karthik Manjima Mohan Wedding Moments

இந்நிலையில் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை மஞ்சிமா மோகன் & கௌதம் கார்த்திக் இணைந்து தங்களது திருமணத்தின் தருணங்களை புகைப்படங்களாக பகிர்ந்துள்ளனர். மேலும் திருமணத்தில் உதவிய தொழில்நுட்ப நண்பர்களுக்கு நன்றி கூறியுள்ளனர்.

Gowtham Karthik Manjima Mohan Wedding Moments

மஞ்சிமா மோகன் & கௌதம் கார்த்திக் பகிர்ந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Also Read | திருமண நாளில் விமானப் பயணம்.. அஜித்தை சந்தித்த தம்பதியரின் சர்ப்ரைஸ் மொமண்ட்! செம வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Gowtham Karthik Manjima Mohan Wedding Moments

People looking for online information on Gautham Karthik, Gowtham Karthik Manjima Mohan Wedding, Manjima Mohan will find this news story useful.