www.garudabazaar.com

கௌதம் மஞ்சிமா திருமணத்தில் மணிரத்னம் & சிவகார்த்திகேயன்.. இணையத்தை கலக்கும் செம போட்டோஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கௌதம் கார்த்திக் & மஞ்சிமா மோகன் திருமணம் நவம்பர் 28 ஆம் தேதி சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.

SivaKarthikeyan Manirathnam in Gautham Karthik Manjima Mohan Wedding

Also Read | வலதுகாலை எடுத்து வைத்து வீட்டினுள் நுழைந்த மஞ்சிமா & கௌதம்.. வைரலாகும் UNSEEN புகைப்படங்கள்!

கடல் (2012) திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகராக அறிமுகமானவர்,  நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக். அதனைத் தொடர்ந்து 'ரங்கூன்', 'முத்துராமலிங்கம்', 'தேவராட்டம்' போன்ற பல படங்களில் கௌதம் கார்த்திக் நடித்துள்ளார். தற்போது 1947, பத்து தல படங்களில் நடித்து வருகிறார்.

அதேபோல கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த  'அச்சம் என்பது மடமையடா' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை மஞ்சிமா மோகன். இதனைத் தொடர்ந்து தமிழில் கௌதம் கார்த்திக் உடன் இவர் இணைந்து 'தேவராட்டம்', விஷ்ணு விஷாலின் 'எஃப்ஐஆர்' மற்றும் விஜய் சேதுபதியுடன் 'துக்ளக் தர்பார்' படங்களில் நடித்துள்ளார்.

SivaKarthikeyan Manirathnam in Gautham Karthik Manjima Mohan Wedding

சில நாட்களுக்கு முன் நடிகர் கௌதம் கார்த்திக் & மஞ்சிமா மோகன் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டனர். மேலும் தாங்கள் காதலிப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

SivaKarthikeyan Manirathnam in Gautham Karthik Manjima Mohan Wedding

நவ.28 ஆம் தேதி சென்னையில் குடும்பத்தினர் முன்னிலையில் தனியார் நிகழ்வாக மஞ்சிமா மோகன் & கௌதம் கார்த்திக் திருமணம் நடைபெற்றது.  நெருங்கிய உறவினர் மற்றும் நண்பர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

SivaKarthikeyan Manirathnam in Gautham Karthik Manjima Mohan Wedding

இவர்களின் திருமண புகைப்படங்கள் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வாழ்த்துகளையும் பெற்றன.

SivaKarthikeyan Manirathnam in Gautham Karthik Manjima Mohan Wedding

இந்நிலையில் கௌதம் கார்த்திக்கை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்திய இயக்குனர் மணிரத்னம், நடிகர் சிவகார்த்திகேயன் ஆகியோர் இந்த திருமணத்திற்கு வந்துள்ளனர்.

SivaKarthikeyan Manirathnam in Gautham Karthik Manjima Mohan Wedding

இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகாமல் இருந்த நிலையில், தற்போது போட்டோகிராபர் ஜாக்சன் ஜேம்ஸ் அணியினர் திருமணத்தில் இயக்குனர் மணிரத்னம் கலந்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். மேலும் நடிகர் சிவகார்த்திகேயன் மணமக்களை வாழ்த்திய வீடியோ & போட்டோவும் வெளியாகி உள்ளது.

Also Read | "பிடிச்சதை செய்ங்க.. மத்ததெல்லாம் தானா வரும்".. வாலிபால் ஆடிய வீடியோவை பகிர்ந்து ரோஜா பதிவு!

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

SivaKarthikeyan Manirathnam in Gautham Karthik Manjima Mohan Wedding

People looking for online information on Gautham Karthik, Gautham Karthik Manjima Mohan Wedding, Manirathnam, Manjima Mohan, Sivakarthikeyan will find this news story useful.