www.garudabazaar.com

சிவகார்த்திகேயன் நடிக்கும் 'மாவீரன்'.. முக்கிய உரிமத்தை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'மாவீரன்' படத்தின் முக்கிய உரிமத்தை பிரபல முன்னணி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

SivaKarthikeyan Maaveeran Mahaveerudu Movie Audio Rights

Also Read | "Total ஃபயரு மாமே".. 'தீ தளபதி' செட்டில் இருந்து எஸ் தமன் வெளியிட்ட வீடியோ!!.. Trending!!

ப்ரின்ஸ், படத்தையடுத்து சிவகார்த்திகேயன் அடுத்த படமாக 'மாவீரன்' படத்தில் இயக்குனர் மடோன் அஸ்வினுடன் இணைந்துள்ளார்.

மடோன் அஸ்வின், யோகிபாபு நடிப்பில் வெளியான 'மண்டேலா' படத்தை இயக்கி இரண்டு தேசிய விருதை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாவீரன் படத்திற்கு தெலுங்கில் இந்த படத்திற்கு மஹாவீருடு என பெயரிடப்பட்டுள்ளது. இந்த மாவீரன் படத்தை பிரின்ஸ் படத்தை தயாரிக்கும் சாந்தி டாக்கிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

SivaKarthikeyan Maaveeran Mahaveerudu Movie Audio Rights

இந்த மாவீரன் படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு பூஜையுடன் துவங்கியது. இந்த பூஜையில் இயக்குனர் ஷங்கர் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடிக்கிறார். மேலும் மற்ற முக்கிய வேடத்தில் மிஷ்கின் & சரிதா நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த படத்தில் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகரான சுனில் இணைந்துள்ளார்.   கடந்த வருடம் அல்லு அர்ஜுன் நடித்து வெளிவந்த 'புஷ்பா' படத்தில் ‘மங்களம் சீனு’ என்ற கதாபாத்திரத்தில் சுனில் வில்லனாக நடித்திருந்தார்.

SivaKarthikeyan Maaveeran Mahaveerudu Movie Audio Rights

இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக விது ஐயனா பணிபுரிகிறார். பரத் சங்கர் இசையமைக்க உள்ளார். இவர்கள் ஏற்கனவே மண்டேலா படத்தில் பணிபுரிந்தவர்கள். 

இந்த படத்தில் பிரபல ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குனர் யானிக் பென் இணைந்துள்ளார். யானிக் பென், தமிழில் துருவ நட்சத்திரம், வெப் சீரிஸான The Family Man-லும் பணிபுரிந்தவர். சமீபத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு, யசோதா படத்திலும் ஸ்டண்ட் இயக்குனராக பென் பணிபுரிந்தவர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  இந்த படத்தின் ஆடியோ உரிமத்தை கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் சஞ்சீவ் கோயங்காவின் பிரபல சரிகம நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Also Read | ஜனனி & அமுது Code word யூஸ் பண்ணாங்களா..?.. பரபரப்பை கிளப்பிய நாமினேஷன்..! bigg boss 6 tamil

தொடர்புடைய இணைப்புகள்

SivaKarthikeyan Maaveeran Mahaveerudu Movie Audio Rights

People looking for online information on Maaveeran, Maaveeran Movie Audio Rights, Saregama, Sivakarthikeyan will find this news story useful.