www.garudabazaar.com

"Total ஃபயரு மாமே".. 'தீ தளபதி' செட்டில் இருந்து எஸ் தமன் வெளியிட்ட வீடியோ!!.. Trending!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தீ தளபதி பாடலின் செட்டில் இருந்து இசை அமைப்பாளர் எஸ் தமன் வெளியிட்ட வீடியோ தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

S Thaman video from thee thalapthy set viral among fans

நடிகர் விஜய் நடிப்பில் அடுத்ததாக வாரிசு திரைப்படம் வெளியாக உள்ளது. 2023 ஆம் ஆண்டு பொங்கல் விருந்தாக இந்த திரைப்படம் திரை அரங்குகளில் வெளியாக உள்ளதாகவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

'வாரிசு' படத்தை வம்சி பைடிபள்ளி இயக்குகிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல் முறையாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர், கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

S Thaman video from thee thalapthy set viral among fans

வாரிசு படத்தின் இறுதிக் கட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், விஜய் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் டைட்டில் அறிவிப்புடன் போஸ்டர்கள் வெளியாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து, சமீபத்தில் 'ரஞ்சிதமே' மற்றும் 'தீ தளபதி' ஆகிய இரண்டு பாடல்களும் வெளியாகி இருந்தது. இதில் ரஞ்சிதமே பாடலை நடிகர் விஜய் மற்றும் மானசி ஆகியோர் பாடி இருந்தனர்.

இதற்கடுத்து வெளியான தீ தளபதி என்ற பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார். நடிகர் சிம்பு இந்த பாடலை பாடியுள்ளார். மேலும் வெளியான இந்த பாடலின் லிரிக் வீடியோவில், நடிகர்கள் விஜய், சிம்பு, இசை அமைப்பாளர் எஸ் தமன் மற்றும் பாடலாசிரியர் விவேக் ஆகியோர் தோன்றி இருந்தனர். வாரிசு படத்தில் இருந்து வெளியாகி உள்ள இரண்டு பாடல்களும் தற்போது ட்ரெண்டிங்கிலும் இருந்து வருகிறது.

S Thaman video from thee thalapthy set viral among fans

இந்த நிலையில், தீ தளபதி லிரிக் வீடியோ செட்டில் இருந்து இசை அமைப்பாளர் எஸ் தமன் பகிர்ந்துள்ள வீடியோ, இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. தளபதி என பின்னாடி எழுத்துக்கள் இருக்கும் இடத்தில் நிற்கும் தமன், கையில் ஆயுதம் ஒன்றை ஏந்திய படி மெதுவாக திரும்பவும் செய்கிறார். மேலும் தனது கேப்ஷனில், "#theethalapathy 🔥🔥🔥🔥 Total Fire Mammmmmeee !!" என்றும் தமன் குறிப்பிட்டுள்ளார்.

 

தொடர்புடைய இணைப்புகள்

S Thaman video from thee thalapthy set viral among fans

People looking for online information on S Thaman, Silambarasan TR, Thee Thalapathy, Varisu, Vijay will find this news story useful.