www.garudabazaar.com

Exclusive: "இப்பவே ஊ சொல்றியா மாமா பாடுனா எப்படி?".. ஆண்ட்ரியா இசை நிகழ்ச்சி.. Vibe ஆன fans.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ஆண்ட்ரியா. ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், தரமணி, வடசென்னை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ள ஆண்ட்ரியா, மலையாளம், தெலுங்கு மொழிகளிலும் சில திரைப்படங்கள் நடித்துள்ளார்.

Andrea jeremiah music concert in chennai fans vibe mode

இவர் நடிப்பில் சமீபத்தில் அனல் மேலே பனித்துளி என்ற திரைப்படமும் வெளியாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து, பிசாசு 2 உள்ளிட்ட திரைப்படங்களும் ஆண்ட்ரியா நடிப்பில் வெளியாக உள்ளது.

நடிகை என்பதையும் தாண்டி, சிறந்த பாடகியாகவும் வலம் வரும் ஆண்ட்ரியா, 'கண்ணும் கண்ணும் நோக்கியா' தொடங்கி 'ஊ சொல்றியா மாமா' என ஏராளமான பாடல்களை பாடி உள்ளார்.

இது தவிர, சில நடிகைகளுக்கு டப்பிங்கும் பேசியுள்ள ஆண்ட்ரியா, பன்முக திறமை கொண்டவராகவும் விளங்கி வருகிறார். இந்த நிலையில், Behindwoods சார்பில் நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சியில் ஆண்ட்ரியா கலந்து கொண்டிருந்தது குறித்த வீடியோ டீசர், Behindwoods TV சேனலில் பிரத்யேகமாக வெளியிடப்பட்டுள்ளது.

நடிகை ஆண்ட்ரியாவின் மியூசிக் கான்சர்ட்டில் ஸ்டீபன் தேவசி, சூப்பர் சிங்கர் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர். உன் மேல ஆச தான், ஊ சொல்றியா மாமா உள்ளிட்ட பல பாடல்களை ஆண்ட்ரியா பாட, மற்ற பாடகர்களும் ஏராளமான ஹிட் படங்களை பாடி இருந்தனர். நடுவே ஊ சொல்றியா பாடலை ரசிகர்கள் கேட்டதாக தெரியும் நிலையில், இதற்கு பதில் சொன்ன ஆண்ட்ரியா, "இப்போவே ஊ சொல்றியா பாடிட்டு வீட்டுக்கு போயிடலாமா?, இல்லைல்ல" என்றும் ஜாலியாக கேட்கிறார்.

ஆண்ட்ரியா பாடல் உள்ளிட்ட அனைத்து பாடல்களுக்கும் அங்கே கூடி இருந்த ரசிகர்கள், Vibe மோடில் ஆட்டம் பாட்டம் என்றும் நிகழ்ச்சியை கண்டு களித்தனர். அதே போல, ஆண்ட்ரியா இசை நிகழ்ச்சியின் முழு வீடியோவைக் காணவும் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

EXCLUSIVE: "இப்பவே ஊ சொல்றியா மாமா பாடுனா எப்படி?".. ஆண்ட்ரியா இசை நிகழ்ச்சி.. VIBE ஆன FANS.! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Andrea jeremiah music concert in chennai fans vibe mode

People looking for online information on Andrea Jeremiah, Stephen Devassy will find this news story useful.