www.garudabazaar.com

Bakasuran : படங்களில் சாதிக்கருத்துக்கள் பேசுவது குறித்து செல்வராகவன் சொல்வது என்ன ? EXCLUSIVE

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மோகன்.G இயக்கத்தில் செல்வராகவன், நட்டி நட்ராஜ் இணைந்து  நடிக்கும் திரைப்படம் பகாசூரன். பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் போன்ற போன்ற படங்களின்  இயக்குனர் மோகன்.G, ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம்  "பகாசூரன்" படத்தை இயக்கி முடித்துள்ளார்.

Bakasuran Selvaraghavan on Mohan G and Pa Ranjith films

Also Read | Varisu : இந்தா வந்துருச்சுல்ல.. விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி..!

இயக்குனர் செல்வராகவன், நட்டி ஆகியோருடன் ராதாரவி, K.ராஜன், ராம்ஸ், சரவண சுப்பையா, தேவதர்ஷினி சசி லையா  ஆகியோர் நடித்துள்ளனர். கதாநாயகியாக தாராக்ஷி நடித்துள்ளார்.

இந்நிலையில் பிஹைண்ட்வுட்ஸ் பேட்டியில் நடிகர், இயக்குநர் செல்வராகவனிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதில்  “உதாரணமாக இயக்குநர் பா.ரஞ்சித் ஒருபுறம், இயக்குநர் மோகன்.ஜி ஒருபுறம் என எதிரெதிர் திசையில் இருக்கிறார்கள், இவர் எடுக்கும் இவருக்கு பிடிக்காது; இவர் எடுக்கும் படத்தை இவர் கவுண்ட்டர் கொடுப்பார்கள் என்பது போலான கருத்துக்களை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்.? இயக்குநர் சினிமா எனும் கருவியை இப்படி பயன்படுத்துவது பற்றிய உங்கள் கருத்து என்ன?” என கேட்கப்பட்டது.

அப்போது பதில் அளித்த செல்வராகவன், “முதல் விஷயம், இவர் எடுக்கும் படம் அவருக்கு பிடிக்கவேண்டும் என்றில்லை, அவர் எடுக்கும் படம் இவருக்கு பிடிக்க வேண்டும் என்றில்லை. எதைப்பற்றி எடுக்க வேண்டும் என்பது அவர்களது இஷ்டம். அவர்களின் மனதில் என்ன இருக்கு என்பது இருக்கிறது. ஆனால் எனக்கு பழக்கப்படாத ஒன்றை பற்றி எனக்கு உரிமை இல்லை. அது என்னுடைய கப் ஆஃப் டீயும் இல்லை” என குறிப்பிட்டார்.

மேலும் 7ஜி ரெயின்போ காலனியில் நாயகன் - நாயகியின் மேலோட்டமான வர்க்க முரண்பாடு பற்றியும் படங்களில் சாதிகள் குறித்து இடம்பெறுவதை பற்றியும் பேசும்போது பதில் அளித்த செல்வராகவன், “அது தேவையில்லை. நான் அதுக்கு படம் பண்ணவரவில்லை. அடுத்து எனக்கு அது தெரியாது. தெரியாத விஷயங்கள் பற்றி பேச முடியாது. ஆனால் ஸ்கிரீனில் நாம் 200 பேருடன் அமர்ந்து படம் பார்க்கும்போது அந்த மேஜிக்கை நாம் கண் முன்னாடி பார்க்கும்போது, அதில் எதுவுமே நமக்கு தெரியாது, நினைவுக்கு வராது. அந்த மேஜிக்தான் சினிமாவே தவிர, அது புத்தி சொல்வதோ, குறிப்பிட்ட ஒரு விசயத்தை சொல்வதோ இல்லை. அவை அனைத்தையும் தாண்டி அப்பால் உள்ளது சினிமா எனும் மேஜிக்” என குறிப்பிட்டுள்ளார்.

Also Read | Vaathi : “நான் தமிழ் நடிகன் .. எனக்கு தமிழ் தான் பேச வரும்” - ‘வாத்தி’ தனுஷ்..!

BAKASURAN : படங்களில் சாதிக்கருத்துக்கள் பேசுவது குறித்து செல்வராகவன் சொல்வது என்ன ? EXCLUSIVE வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Bakasuran Selvaraghavan on Mohan G and Pa Ranjith films

People looking for online information on Bakasuran, Mohan g, Selvaraghavan will find this news story useful.