www.garudabazaar.com

"ஆத்தா மதுரை மீனாட்சி துணை".. SKவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய சூரி..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்தநாளுக்கு நடிகர் சூரி வாழ்த்து கூறியுள்ளார்.

Actor Soori wishes Siva Karthikeyan for birthday

Images are subject to © copyright to their respective owners.

Also Read | சிவகார்த்திகேயன் பிறந்தநாள்.. வாழ்த்து கூறி Unseen போட்டோவை வெளியிட்ட அடுத்த பட இயக்குனர்!

ஆரம்ப காலங்களில் மெமிக்ரி கலைஞர், டிவி தொகுப்பாளராக பணியாற்றி தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் தொகுப்பாளராக விஜய் டிவியில் பணியாற்றிய போது கலக்க போவது யாரு?, அது இது எது, ஜோடி நம்பர் 1 போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இது போக பல விருது நிகழ்ச்சிகள், இசை வெளியீட்டு விழா, பட வெற்றி விழாக்களையும் தொகுத்து வழங்கி உள்ளார்.

  தமிழ் சினிமாவில் இவர் படங்கெளுக்கென்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகி வருகிறது. ப்ரின்ஸ், படத்தையடுத்து சிவகார்த்திகேயன் அடுத்த படமாக 'மாவீரன்' படத்தில் இயக்குனர் மடோன் அஸ்வினுடன் இணைந்துள்ளார்.

மடோன் அஸ்வின், யோகிபாபு நடிப்பில் வெளியான 'மண்டேலா' படத்தை இயக்கி இரண்டு தேசிய விருதை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Actor Soori wishes Siva Karthikeyan for birthday

Images are subject to © copyright to their respective owners.

இந்த மாவீரன் படத்திற்கு தெலுங்கில் இந்த படத்திற்கு மஹாவீருடு என பெயரிடப்பட்டுள்ளது. இந்த மாவீரன் படத்தை பிரின்ஸ் படத்தை தயாரிக்கும் சாந்தி டாக்கிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. முழுவீச்சில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

மாவீரன் படத்தோடு அயலான் & நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் புதிய படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார்.

இந்நிலையில் இன்று நடிகர் சிவகார்த்திகேயன், இன்று தனது 38-வது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றார். இதனை முன்னிட்டு நடிகர் சூரி தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், "கடின உழைப்பாளி

அருமையான கலைஞன்

சிறந்த மனிதன்

அன்பு தம்பி சிவகார்த்திகேயன் க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

ஆத்தா மீனாட்சி துணை எப்பவும் உங்களுக்கு இருக்கும் தம்பி, என் பிராத்தனைகள்!

தொடர்ந்து பயணிப்போம்"  என வாழ்த்தி ட்வீட் செய்துள்ளார்.

Also Read | 'LEO' பட பிரபலத்தின் பிறந்தநாள்.. முத்தம் கொடுத்து வாழ்த்திய லோகேஷ் 😍 தீ வைரல் போட்டோஸ்!

தொடர்புடைய இணைப்புகள்

Actor Soori wishes Siva Karthikeyan for birthday

People looking for online information on Sivakarthikeyan, Soori, Soori wishes Siva Karthikeyan birthday will find this news story useful.