www.garudabazaar.com

“நான் சொன்னா திட்டுவாங்க.. அதே வெற்றிமாறன் Sir சொன்னா..” - இயக்குநர் மோகன்.G பரபரப்பு பேச்சு..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மோகன்.G இயக்கத்தில் செல்வராகவன், நட்டி நட்ராஜ் இணைந்து  நடிக்கும் திரைப்படம் பகாசூரன். பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் போன்ற போன்ற படங்களின்  இயக்குனர் மோகன்.G, ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம்  "பகாசூரன்" படத்தை இயக்கி முடித்துள்ளார்.

Mohan G Speech about Caste in Bakusuran press meet

Images are subject to © copyright to their respective owners.

Also Read | "போதும்டி.. இதுக்குமேல என்னால முடியலடி.!!".. மகாலஷ்மிக்கு ரவீந்தரின் வைரல் லவ் லெட்டர்..!❤️

இயக்குனர் செல்வராகவன், நட்டி ஆகியோருடன் ராதாரவி, K.ராஜன், ராம்ஸ், சரவண சுப்பையா, தேவதர்ஷினி சசி லையா  ஆகியோர் நடித்துள்ளனர். கதாநாயகியாக தாராக்ஷி நடித்துள்ளார்.

சாம் C.S. இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். பழைய வண்ணாரப்பேட்டை , ருத்ர தாண்டவம் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பாரூக், இந்த படத்திற்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் போஸ்டர்கள் & முன்னோட்டம் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று உள்ளது. இந்த படத்தின் ஒட்டுமொத்த தமிழக ரிலீஸ் உரிமத்தை பிரபல வினியோகஸ்தர் SSN Production சுப்பையா கைப்பற்றியுள்ளார்.

இதில் பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த இயக்குநர் மோகன்.ஜி, “உங்களுக்கே தெரியும். உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்ல முடியும். எதையெல்லாம் நான் திணித்தேன், எவையெல்லாம் உண்மையாக இருக்கின்றன என்பது உங்களுக்கே தெரியும். திரௌபதி படத்தைப் பொறுத்தவரை நான் பார்த்த சில விஷயங்களை பதிவு செய்ததாக நானே ஒப்புக் கொண்டிருக்கிறேன். இந்த மேடையிலேயே ஜாதி பார்த்து யாரும் அமரவில்லை எல்லா ஜாதியினரும் இங்கு கலந்துதான் இருக்கின்றனர்.

எனவே திட்டமிட்டு இந்த விவகாரத்தை பிரச்சாரம் பண்ணியது போல் ஆகிவிட்டது. ஆனால் நான் சொன்னது... உண்மையிலேயே ஜாதி இருக்கா என்று கேட்டால் இருக்கிறது. அதைதான் 2 நாட்களுக்கு முன்பாக வெற்றிமாறனும் கூறுகிறார்.

சிலருக்கு ஜாதி தேவைப்படாமல் இருக்கலாம். அடித்தட்டில் இருக்கும் மக்களுக்கு இட ஒதுக்கீடுக்காக அது தேவைப்படலாம். ஆனால் இதை நான் சொல்லும்போது திட்டினார்கள். வெற்றிமாறன் சார் சொல்லும்போது பாராட்டினார்கள் ஆக யார் சொல்ல வேண்டும் என்பதில்தான் அனைத்தும் இருக்கிறது.  அவ்வளவுதான் வித்தியாசம்” என தெரிவித்துள்ளார்.

Also Read | “இவரை எப்படி ஆடவெப்பாங்க?”.. “இந்த பூனையும் பால் குடிக்குமா?”.. செல்வராகவன் பற்றி கூல் சுரேஷ்

தொடர்புடைய செய்திகள்

Mohan G Speech about Caste in Bakusuran press meet

People looking for online information on Bakusuran, Cool Suresh Selvaraghavan will find this news story useful.