www.garudabazaar.com

Vaathi : “நான் தமிழ் நடிகன் .. எனக்கு தமிழ் தான் பேச வரும்” - ‘வாத்தி’ தனுஷ்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நாகவம்சியின் சித்தாரா என்டர்டெயின்மென்ட்  நிறுவனத்தின் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் தமிழ் - தெலுங்கு திரைப்படம் 'வாத்தி'. பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இந்த படத்திற்கு தமிழில் "வாத்தி" என்று தலைப்பு வைக்கப்பட்டு இப்படம் பிப்ரவரி 17 முதல் திரையரங்கில் ஒளிபரப்பாகிறது.

Dhanush Speech in Vaathi Pre release event Hyderabad

Images are subject to © copyright to their respective owners.

Also Read | 'LEO' பட பிரபலத்தின் பிறந்தநாள்.. முத்தம் கொடுத்து வாழ்த்திய லோகேஷ் 😍 தீ வைரல் போட்டோஸ்!

தெலுங்கில் சார் (Sir) என்றும் தலைப்பு வைக்கப்பட்டுள்ள்ளது. கல்வித்துறையை அடிப்படையாக கொண்ட இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 2022 ஜனவரி 5 அன்று தொடங்கியது.  இப்படத்துக்கு யுவராஜ் ஒளிப்பதிவு செய்ய,  எடிட்டராக நவீன் நூலி , இசையமைப்பாளராக G.V.பிரகாஷ் இந்த படத்தில் பணிபுரிகின்றனர்.

இப்படத்தில் தனுஷூடன் நடிகை சம்யுக்தா மேனன்,சாய் குமார், தணிகெள பரணி, சமுத்திரக்கனி, தோட்டப்பள்ளி மது, நர்ரா ஸ்ரீனிவாஸ், பம்மி சாய், ஹைப்பர் ஆதி, ஷாரா, ஆடுகளம் நரேன், இளவரசு, மொட்ட ராஜேந்திரன், ஹரீஷ் பேரடி, பிரவீணா ஆகியோர் நடிக்கிறார்கள். கல்வித்துறையை அடிப்படையாகக் கொண்டு இந்த படத்தின் டிரெய்லரில், “படிப்பு பிரசாதம் மாதிரி குடுங்க. 5 ஸ்டார் ஹோட்டல் சாப்பாடு மாதிரி கொடுக்காதீங்க” என்கிற வசனம் வரும். அந்த ஒற்றை வரிகளே கதையின் தன்மையை புரியவைக்கிறது. ஆம், கல்வி வியாபாரமாக்கப்படுவதையும், தவறான ஆட்கள் கையில் சிக்கிக் கொள்வதையும் அதை எதிர்க்கும் நல்லாசிரியரின் பார்வையில் இருந்து விவரிக்கப்படுகிறது.

Dhanush Speech in Vaathi Pre release event Hyderabad

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் ஹைதராபாத்தில் நடந்த ப்ரீ ரிலீஸ் நிகழ்வில் ரசிகர்கள் முன்பாக மேடையில் தம் படக்குழுவினருடன் நின்றபடி பேசிய நடிகர் தனுஷ்,  “நான் ஒரு தமிழ் நடிகன் .. எனக்கு தமிழ் தான் பேச வரும், இருப்பினும் புரோக்கன் தெலுங்கு மொழியில் ஓரளவு பேசுகிறேன்” என குறிப்பிட்டு பேசத் தொடங்கிய வீடியோ வைரலாகி வருகிறது.

Also Read | Varisu : இந்தா வந்துருச்சுல்ல.. விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி..!

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush Speech in Vaathi Pre release event Hyderabad

People looking for online information on Dhanush Speech, Dhanush Vaathi, Hyderabad will find this news story useful.