www.garudabazaar.com

தங்கலான் படப்பிடிப்பில் இருந்து சீயான் விக்ரம்.. "லுக்கு சும்மா தெறியா இருக்கே"...

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களுள் ஒருவர் இயக்குனர் பா. ரஞ்சித். 'அட்டகத்தி' மூலம் இயக்குனராக அறிமுகமான பா. ரஞ்சித், அடுத்த படத்தில் கார்த்தியை வைத்து 'மெட்ராஸ்' என்ற படத்தையும் இயக்கி இருந்தார்.

Chiyaan Vikram Thangalaan look new pics viral on social media

Images are subject to © copyright to their respective owners.

Also Read | சிவகார்த்திகேயன் பிறந்தநாள்.. வாழ்த்து கூறி Unseen போட்டோவை வெளியிட்ட அடுத்த பட இயக்குனர்!

இதற்கு அடுத்தபடியாக, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து கபாலி, காலா ஆகிய திரைப்படங்களையும் அடுத்தடுத்து இயக்கி இருந்தார் பா. ரஞ்சித்.

இதனைத் தொடர்ந்து, சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி இருந்த பா. ரஞ்சித், தற்போது விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி உள்ளிட்டோர் நடித்து வரும் 'தங்கலான்' என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

Chiyaan Vikram Thangalaan look new pics viral on social media

Images are subject to © copyright to their respective owners.

இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். தங்கலான் படத்தின் இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் ஒப்பந்தமாகி உள்ளார். ஒளிப்பதிவை கிஷோர் குமாரும், படத்தொகுப்பை செல்வாவும் கவனித்து கொள்கின்றனர். எஸ்.எஸ். மூர்த்தி கலை இயக்குனராக பணிபுரியும் இந்தப் படத்தில் ஏகன் ஏகாம்பரம் ஆடை வடிவமைப்பாளராக ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படம் 18 ஆம் நூற்றாண்டு பின்னணியில் கோலார் தங்க வயலை அடிப்படையாகக் கொண்டு உருவாக உள்ளது.

Chiyaan Vikram Thangalaan look new pics viral on social media

Images are subject to © copyright to their respective owners.

ஜனவரி மாதம் முதல் தங்கலான் படத்தின் படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படத்தின் தற்போதைய படப்பிடிப்பு, KGF பகுதியில் நடைபெற்று வருவதாக தெரிகிறது. இந்த நிலையில், தங்கலான் படத்தின் நடிகர் விக்ரம் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையவாசிகள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

தங்கலான் பட கெட் அப்பில் மிக வித்தியாசமான தலை முடியுடன் விக்ரம் இந்த புகைப்படத்தில் உள்ளார். 18 ஆம் நூற்றாண்டு கதையில் இருக்கும் ஒரு லுக்கில், கண்ணில் கண்ணாடி போட்டுக் கொண்டு ட்ரெண்ட் ஆக விக்ரம் இருக்கும் இந்த புகைப்படங்கள், ரசிகர்களை வெகுவாக கவர்ந்தும் வருகிறது.

Also Read | Varisu : இந்தா வந்துருச்சுல்ல.. விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி..!

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Chiyaan Vikram Thangalaan look new pics viral on social media

People looking for online information on Chiyaan Vikram, Thangalaan, Vikram will find this news story useful.