www.garudabazaar.com

Venkat Prabhu : மறைந்த தமது அன்னையின் பிறந்த தினம்.. இயக்குநர் வெங்கட் பிரபு உருக்கம்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல இசையமைப்பாளரும் இயக்குநருமான கங்கை அமரனின் மனைவியும், இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் நடிகர் பிரேம்ஜியின் அம்மாவுமான மணிமேகலை கடந்த 2021 மே 9-ஆம் தேதி அன்னையர் தினத்தில் காலமானார்.

Director Venkat Prabhu late mother birthday emotional post

Also Read | "புதிய தொடக்கம்".. முன்னணி நடிகைகளுடன் கீர்த்தி சுரேஷ்.. TRENDING புகைப்படங்கள்! என்னவா இருக்கும்?

அந்த நேரத்தில், “எங்களது குடும்பத்தின் குலதெய்வத்தை இழந்துவிட்டோம்” என இயக்குநர் வெங்கட் பிரபு உருக்கமாக கூறியிருந்தார். இதேபோல் இந்த 2022 வருடம் மே மாதம், “நீங்களின்றி ஒரு வருடத்தை எப்படித்தான் கடந்தேனோ.. மிஸ் யூ அம்மா” என குறிப்பிட்டு இயக்குநர் வெங்கட் பிரபு தனது அம்மாவின் புகைப்படத்தை பகிர்ந்து அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தமது அம்மாவின் பிறந்த நாளான நவம்பர் 18-ஆம் தேதியான இன்று தமது தாயுடனான ஃபோட்டோவை பகிர்ந்து, ‘மிஸ் யூ அம்மா’ என உருக்கமாக பதிவிட்டுள்ளார். தாயாரை இழந்த சோகமும், தாயாரது நினைவும் அகலாமல் அவ்வப்போது தமது தாயாரை பற்றி இயக்குநர் வெங்கட் பிரபு பதிவிடும் பதிவுகள் மிகழும் நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளனர். இதை பார்த்த ரசிகர்கள், “நாம் நினைக்கும்போதெல்லாம் நம்மை மனதார ஆசீர்வதிக்கும் ஒரே ஜீவன் தாய்தான். அவருடைய ஆற்றல் என்றும் உங்களுடனேயே இருக்கும்” என கூறியுள்ளனர்.

Director Venkat Prabhu late mother birthday emotional post

இயக்குநர் வெங்கட் பிரபு தமிழில் மாநாடு,  மன்மத லீலை உள்ளிட்ட படங்களை கடைசியாக இயக்கியிருந்தார். தவிர வெங்கட்பிரபு இயக்கத்தில் தற்போது நாகசைதன்யா நடிக்கும் NC 22 படம் தமிழ்- தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் நடிகர்கள் அரவிந்த்சாமி, சரத்குமார், தேசிய விருது பெற்ற நடிகை ப்ரியாமணி ஆகியோர்  முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். ப்ரேம்ஜி அமரன், ப்ரேமி விஷ்வானந்த், சம்பத்ராஜ் மற்றும் வெண்ணிலா கிஷோர் ஆகியோரும் இந்தப் படங்களில் இணைந்துள்ளனர்.

Director Venkat Prabhu late mother birthday emotional post

இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு மைசூரில் நடந்து முடிந்தது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் அரவிந்த் சாமி வில்லனாக நடித்து வருகிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | Nayanthara Birthday : பிறந்தநாள் ட்ரீட் .. நடிகை நயன்தாரா நடித்த கனெக்ட் பட டீசர் இன்று வெளியாகிறது!

தொடர்புடைய இணைப்புகள்

Director Venkat Prabhu late mother birthday emotional post

People looking for online information on Venkat Prabhu will find this news story useful.