www.garudabazaar.com

நகரின் முக்கிய சாலையில் நடந்து சென்ற ஹிருத்திக் ரோஷன்.. ஆரவாரமான ரசிகர்கள்.. வைரல் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ரசிகர்களுடன் நடிகர் ஹிருத்திக் ரோஷன் சாலையில் பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Hrithik Roshan walking in Tezpur Street Fighter Movie Shooting

Also Read |  பிரம்மாண்ட பாலிவுட் படத்தில் இணைந்த 'துணிவு' படத்தின் ஸ்டண்ட் இயக்குனர்! செம்ம அப்டேட்

ஹிருத்திக் ரோஷன் & தீபிகா படுகோனே நடிக்கும் புதிய திரைப்படம் ஃபைட்டர்.

நடிகை தீபிகா படுகோன் கடைசியாக ஷகுன் பத்ராவின்  கெஹ்ரையான் படத்தில் நடித்தார். இதற்கு முன் கபீர் கானின் 83, படத்தில் தனது கணவர் ரன்வீர் சிங்குடன் நடித்திருந்தார்.

தற்போது ஹிருத்திக் ரோஷனுடன் ஃபைட்டர் படத்திலும், ஷாருக்கான் மற்றும் ஜான் ஆபிரகாம் நடிக்கும் பதான் படத்திலும் நடித்து வருகிறார். பதான் படம் ஜனவரி 2023 இல் ரிலீசாக உள்ளது.

Hrithik Roshan walking in Tezpur Street Fighter Movie Shooting

ஹிருத்திக் ரோஷன், கடைசியாக விக்ரம் வேதா படத்தில் வேதா கதாபாத்திரத்தில் நடித்தார். புஷ்கர் காயத்ரி இயக்கய இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. 

தற்போது ஹிருத்திக் ரோஷன், தீபிகா படுகோனே நடிக்கும் ஃபைட்டர் படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.   ஃபைட்டர்  2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Hrithik Roshan walking in Tezpur Street Fighter Movie Shooting

இந்தியாவின் முதல் ஏரியல் ஆக்சன் திரைப்படம் என்ற வாசகத்துடன் இந்த படம் வெளியாக உள்ளது. சித்தார்த் ஆனந்த் இந்த படத்தினை இயக்கி வருகிறார்.  இயக்குனர் சித்தார்த் ஆனந்த் தற்போது ஷாருக்கான் நடிக்கும் பதான் படத்தினையும் இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் வார் & பேங் பேங் படங்களை இயக்கியுள்ளார். வியாகாம் 18 ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள தேஸ்பூர் நகரில் நடைபெற்று வருகிறது. அங்குள்ள விமானப்படை தளத்தில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் நடிகர் ஹிருத்திக் ரோஷன் கலந்து கொண்டுள்ளார்.

Hrithik Roshan walking in Tezpur Street Fighter Movie Shooting

இச்சூழலில் தேஸ்பூர் நகரில் உள்ள சாலையில் இரவு நேரத்தில் ஹிருத்திக் ரோஷன் நடந்து செல்லும் போது ரசிகர்கள் ஆரவாரம் செய்கின்றனர். அப்போது அவர்களை நோக்கி கை அசைத்த ஹிருத்திக் ரோஷன், "நான் தான் மிகுந்த அதிர்ஷ்டசாலி" என ரசிகர்களை நோக்கி பேசி சென்றார். இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

 

Also Read | விஜய் நடிக்கும் 'வாரிசு'.. UK தியேட்டர் ரிலீஸ் உரிமத்தை கைப்பற்றிய பிரபல தயாரிப்பாளர்! போடு

தொடர்புடைய இணைப்புகள்

Hrithik Roshan walking in Tezpur Street Fighter Movie Shooting

People looking for online information on Fighter Movie, Fighter Movie Shooting, Hrithik Roshan, Tezpur Street will find this news story useful.