www.garudabazaar.com

வெங்கட் பிரபு & நாக சைதன்யா இணையும் புதிய படம்.. வெளிவந்த சரவெடி அப்டேட்! முழு விவரம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வெங்கட் பிரபு - நாக சைதன்யா இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Venkat Prabhu Naga Chaitanya NC22 Movie Mysore Shooting Update

Also Read | சந்தீப் கிஷன் & விஜய் சேதுபதி நடிக்கும் 'மைக்கேல்'.. நடிகர் தனுஷ் வெளியிட்ட மிரட்டலான டீசர்!

ஆக்‌ஷன் எண்டர்டெயினராக உருவாகி வரக்கூடிய இந்தப் படத்தில் இணைந்துள்ள நடிகர்கள் குறித்தான அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டு படத்தின் எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இந்தப் படத்தில் நாகசைதன்யா முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில்  நடித்து வருகிறார். மேலும், அவரது சினிமா பயணத்தில் அதிக பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு வரக்கூடிய படமும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

Venkat Prabhu Naga Chaitanya NC22 Movie Mysore Shooting Update

இசையில் மேதமைகளான அப்பா- மகன் இணை ‘மாஸ்ட்ரோ’ இசைஞானி இளையராஜா மற்றும் ‘லிட்டில் மாஸ்ட்ரோ’ யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளனர்.

மதிப்புமிக்க ’ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கீரின்’ பேனரின் கீழ் ஸ்ரீனிவாசா சித்தூரி இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறார். பவன்குமார் இந்தப் படத்தை  வழங்குகிறார். அபூரி ரவி படத்திற்கு வசனம் எழுத, SR கதிர் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

Venkat Prabhu Naga Chaitanya NC22 Movie Mysore Shooting Update

இப்படத்தில் நாகசைதன்யா, கீர்த்தி ஷெட்டி, அரவிந்த்சாமி, ப்ரியாமணி, சரத்குமார், ப்ரேம்ஜி அமரன், ப்ரேமி விஷ்வானந்த், சம்பத் ராஜ், வெண்ணிலா கிஷோர் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

இந்நிலையில் ’NC 22’ படத்தின் முக்கியமான ஷெட்யூலின் படப்பிடிப்பு மைசூரில் நிறைவடைந்துள்ளது.

Venkat Prabhu Naga Chaitanya NC22 Movie Mysore Shooting Update

தற்போது இந்தப் படத்தின் முக்கியமான ஷெட்யூல் மைசூரில் முடிந்துள்ளது. இதில் நடிகர் நாகசைதன்யாவும் பங்கேற்றிருக்கிறார். மைசூரின் அழகிய இடங்கள் பலவற்றில் படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.

Also Read | பிரான்ஸில் உள்ள உலகப்புகழ் பெற்ற இடத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்.. அப்படி என்ன ஸ்பெஷல்? முழு விவரம்

Venkat Prabhu Naga Chaitanya NC22 Movie Mysore Shooting Update

People looking for online information on Naga chaitanya, NC22, NC22 Movie updates, Venkat Prabhu will find this news story useful.