www.garudabazaar.com

"புதிய தொடக்கம்".. முன்னணி நடிகைகளுடன் கீர்த்தி சுரேஷ்.. TRENDING புகைப்படங்கள்! என்னவா இருக்கும்?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ், தெலுங்கு, மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ்.

Keerthy Suresh Latest Photo with Top Actresses in Her Home

பிரபல தென்னிந்திய நடிகை மேனகா & சினிமா தயாரிப்பாளர் & இயக்குனர் தொழிலதிபர் சுரேஷ்குமார் ஆகியோரின் இளைய மகள் தான் கீர்த்தி சுரேஷ்.  தமிழில் இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளிவந்த 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் கீர்த்தி சுரேஷ்  அறிமுகமானார்.

Keerthy Suresh Latest Photo with Top Actresses in Her Home

தெலுங்கில் 'மகாநடி' என்றும் தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்று வெளியான படத்திற்காக இந்திய அரசின் உயரிய விருதான தேசிய விருதை பெற்றார். சமீபத்தில் மரக்காயர், அண்ணாத்த,சர்காரு வாரி பட்டா, சாணிகாயிதம், வாஷி  படங்களில் நடித்து இருந்தார்.

கீர்த்தி சுரேஷ் தற்போது மாமன்னன், தசரா, போலோ ஷங்கர், உள்ளிட்ட படங்களின் ரிலீசுக்கு காத்திருக்கிறார். சமீபத்தில் ஜெயம் ரவியுடன் நடிக்கும் சைரன் படத்தில் இணைந்துள்ளார்.

Keerthy Suresh Latest Photo with Top Actresses in Her Home

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவராக கீர்த்தி சுரேஷ் உள்ளார். இவரின் பதிவுகளுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உண்டு. தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  13.9 மில்லியன் ரசிகர்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.  1.39 கோடி இன்ஸ்டாகிராம் கணக்கு உடைய ரசிகர்கள் தற்போது கீர்த்தி சுரேஷை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்கிறார்கள்.

Keerthy Suresh Latest Photo with Top Actresses in Her Home

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "மிகச்சிறந்த மனிதர்களுடன் மிகச்சிறந்த இரவு" என பதிவிட்டு நடிகைகள் ராதிகா, லிஸி, கல்யாணி பிரியதர்ஷன், அனா பென், பார்வதி திருவொத்து, ரீமா கல்லிங்கல், அதிதி பாலன், ப்ரயகா மார்டின் ஆகியோருடன் இணைந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். மேலும் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் 'புதிய துவக்கம்' என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Keerthy Suresh Latest Photo with Top Actresses in Her Home

People looking for online information on Aditi Balan, Ana Ben, Kalyani Priyadarshan, Keerthy Suresh, Parvathy Trivothu, Radhika, Reema Kallingal will find this news story useful.