அடுத்த அஜித் படத்தை பற்றி கே.எஸ்.ரவிகுமார் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
![director ks ravikumar shares his next film over ajith's next director ks ravikumar shares his next film over ajith's next](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/director-ks-ravikumar-shares-his-next-film-over-ajiths-next-news-1.jpg)
அஜித் தற்போது நடித்து வரும் திரைப்படம் வலிமை. ஹெச்.வினோத் இத்திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும் படத்தின் வில்லன் மற்றும் கதாநாயகி குறித்த அறிவிப்புகள் இன்னும் வெளியிடப்படவில்லை. ஆக்ஷன் கலந்த அதிரடி திரைப்படமாக இது தயாராகி வருகிறது. இதற்கிடையில் அஜித்தின் அடுத்த படத்தை யார் இயக்குகிறார்கள் என வலைதளங்களில் விவாதங்கள் தொடங்கியுள்ளன.
இந்நிலையில் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இது குறித்த தனது பதிவில், 'அஜித் குமாரின் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க, நான் இயக்குவதாக அறிவித்த ட்விட்டர் கணக்கு எனதில்லை. அது முற்றிலும் தவறான செய்தி. எனக்கு ட்விட்டரில் எந்த அக்கவுன்ட்டும் இல்லை. ஃபேக் அக்கவுன்ட்டுகளை நம்பாதீர்கள்' என அவர் பதிவிட்டுள்ளார். கே.எஸ்.ரவிகுமார் அஜித் கூட்டணியில் உருவான வரலாறு படம் பெரிய வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது. .