தல அஜித்-ஹெச்.வினோத்தின் திரைப்படம் தெலுங்கில் ரீமேக்! - டைட்டில் லுக் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்தல அஜித்தின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் நேர்கொண்ட பார்வை. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த இந்த படத்துக்கு பிரபல ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய ஹெச்.வினோத் இயக்கியிருந்தார்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்த இந்த படத்தில் ஷரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜூன் சிதம்பரம், ரங்கராஜ் பாண்டே, அபிராமி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
விமர்சன ரீதியாக இந்த படம் பெரும் வரவேற்பை பெற்றது. இது அமிதாப் பச்சன், டாப்சி இணைந்து நடித்த ’பிங்க்’ படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும். இந்நிலையில் இந்த திரைப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக் ஆக உள்ளது. இதில், பவன் கல்யாண் நாயகனாக நடிக்கிறார். இது பவன்கல்யாணின் 26வது படமாகும். இந்த படத்துக்கு தமன் எஸ். இசையமைக்கிறார்.