அஜித்தின் வலிமை ரிலீஸ் தேதி : தார தப்பட்ட கிழிய போவுது.. இது நம்ம தல தீபாவளி!
முகப்பு > சினிமா செய்திகள்அஜித் நடிக்கும் வலிமை படம் இந்த வருடம் தீபாவளிக்கு வெளியாவதாக கூறப்படுகிறது.

அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஹெச்.வினோத். இவர் அஜித்தை வைத்து எடுத்த நேர்கொண்ட பார்வை திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி, பலரது பாராட்டுக்களை பெற்றது. இதையடுத்து இந்த ஜோடி மீண்டும் இணையும் படத்திற்கு வலிமை என பெயரிடப்பட்டிருக்கிறது. ஶ்ரீதேவியின் கணவரான போனி கபூர் இத்திரைப்படத்தை தயாரிக்கிறார். வலிமை படத்தின் ஷூட்டிங் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் வலிமை படம் நவம்பர் 12-ஆம் தேதி வெளியாக போவதாக கூறப்படுகிறது. தீபாவளிக்கு (நவம்பர் 14) இத்திரைப்படத்தை வெளியிட திட்டமிருந்ததாகவும், தீபாவளிக்கு இரண்டு நாட்கள் முன்னதாக, 12-ஆம் தேதி (வியாழக்கிழமை) அன்று படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அஜித் நடித்த விஸ்வாசம் கடந்த 2019 பொங்கல் அன்று வெளியாகி மிகப்பெரிய வெற்றிப்பெற்றது. இதையடுத்து வலிமை இந்த வருட தீபாவளிக்கு வெளியாகும் என கூறப்படுவது அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பிலும் வலிமை படத்துக்கு எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.