தல அஜித்தின் 'வலிமை' விவகாரம் குறித்து பிரபல நடிகருக்கு ஆறுதல் சொன்ன மாஸ்டர் நடிகர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'நேர்கொண்ட பார்வை'க்கு பிறகு தல அஜித்,  H.வினோத் இயக்கத்தில் 'வலிமை' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை Bayview Projects LLP சார்பாக போனி கபூர் இந்த படத்தை தயாரித்து வருகிறார்.

Thala Ajith's Valimai, Prasanna not to part off it , Master Shanthnu Tweets

இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, நீரவ் ஷா இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார். இந்த படத்தில் மெட்ராஸ் வட சென்னை உள்ளிட்ட படங்களில் நடித்த பாவெல் நவகீதன் முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம்.

இந்நிலையில் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் பிரபல நடிகர் பிரசன்னா நடிக்கவிருப்பதாக தகவல் பரவியது. இதனையடுத்து இதுகுறித்து பிரசன்னா விளக்கம் அளித்துள்ளார். அதில், வலிமையில் நடிப்பதற்கு விருப்பப்பட்ட வாழ்த்துகள் சொன்ன அனைவருக்கும் என் இதயத்தில் இருந்து நன்றி.

வலிமையில் நான் இருப்பதாக பேச்சுக்கள் அடிப்பட்டதும் என் வாழ்க்கையின் மிகப்பெரிய அறிவிப்பு வர போகிறதென்று ஆர்வமாக இருந்தது. ஆனால் எதிர்பாராதவிதமாக தல அஜித்துடன் நடிக்கும் சிறப்பான வாய்ப்பு இந்த முறை நடைபெறவில்லை.

இந்த ஏமாற்றத்திலும் உங்கள் அன்பினால் நான் அதிக பலமிக்கவனாக உணர்கிறேன். அடுத்த முறை நிச்சயம் நான் தல அஜித்துடன் நடிப்பேன்.  என்னுடன் அன்பை தொடர்ந்து பகிருங்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார். அதற்கு பதிலளித்த சாந்தனு, ''லவ்யூ மச்சி. தல விரைவில் உன்னை அழைப்பார் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்'' என்று ஆறுதல் தெரிவித்தார்.

Entertainment sub editor