'சிறந்த காமெடி படம்' என பார்வையாளர்கள் விருதை வென்ற இந்த தனுஷ் படம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனது யதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் தனுஷ் . 'ஆடுகளம்' படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை அவர் வென்றுள்ளார். தமிழ் மட்டுமல்லாது ஹிந்தியில் 'ராஞ்சனா', ஷமிதாப் உள்ளிட்ட படங்களில் நடித்து இந்திய அளவில் பிரபலமடைந்துள்ளார்.

Dhanush's The Extraordinary Journey Of The Fakir got Best Comedy audience award

மேலும் 'தி எக்ஸ்டார்டினரி ஜர்னி ஆஃப் தி ஃபாகிர்' என்ற பெயரில் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு ஆகிய மொழிகளில் உருவான படத்தில் நடித்திருந்தார். நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவான இந்த படம் கடந்த ஆண்டு மே 18 ஆம் தேதி பிரான்ஸில் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் இந்த படம் பார்ஸிலோனோ சாண்ட் - ஜோர்டி சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டுள்ளது. இதனையடுத்து அந்த படம் சிறந்த காமெடி படம் என்ற பார்வையாளர்கள்  விருதை வென்றுள்ளது.