'மாரி 2' படத்துக்கு பிறகு தனுஷ், வெற்றி மாறன் இயக்கத்தில் 'அசுரன்' படத்தில் நடித்துவருகிறார். அதனைத் தொடர்ந்து துரை செந்தில் குமார் இயக்கும் இன்னும் பெயரிடப்படாத படத்தில்நடித்துவருகிறார்.

இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துவருகிறது. புதுப்பேட்டைக்கு பிறகு நடிகை சினேகா தனுஷுடன் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு விவேக் - மெர்வின் இசையமைக்க, ஓம் பிரகாஷ் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு குற்றாலத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவந்தது. இந்நிலையில் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.