நடிகர் தனுஷ் நடிக்கவிருக்கும் புதிய திரைப்படத்தில் அவருக்கு வில்லனாக தெலுங்கு திரைப்பட நடிகர் நடிக்கிறார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் ‘அசுரன்’ படத்தில் நடித்து வரும் நடிகர் தனுஷ், சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் நடிக்கும் புதிய படத்திலும் நடித்து வருகிறார்.
‘விஸ்வாசம்’ திரைப்படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் திரைப்படத்தை ‘கொடி’ பட இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்குகிறார். ‘தொடரி’ திரைப்படத்திற்கு பின் இரண்டாவது முறையாக சத்ய ஜோதி ஃபிலிம்ஸ்-தனுஷ் கூட்டணி அமைத்துள்ளனர்.
இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சினேகா நடிக்கிறார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திர்கு விவேக்-மெர்வின் இணை இசையமைக்கவுள்ளனர்.
இந்நிலையில், இப்படத்தில் தனுஷுக்கு வில்லனாக பிரபல தெலுங்கு நடிகர் நவீன் சந்திரா நடிப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இப்படம் குறித்த கூடுதல் தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.