தீ விபத்தால் 'தளபதி 63' ஷூட்டிங் பாதிப்பு ? - உண்மை விபரம் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'சர்கார்' படத்துக்கு பிறகு தளபதி விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் 'தளபதி 63' படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தில் நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், கதிர், விவேக், யோகி பாபு என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.

Vijay and Nayanthara's Thalapathy 63 directed by Atlee shoot was interrupted due to fire accident

கால் பந்து விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகி வருவதாக கூறப்படும் இந்த படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார்.  இந்த பட்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்புக்காக அமைக்கப்பட்ட அரங்குகளில் தீ விபத்து ஏற்பட்டதாகவும்,  இதனால் தளபதி 63 படத்தின் படப்பிடிப்பு பணிகள் தடைப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகிய வண்ணம் இருந்தன.

இதனையடுத்து எங்களுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்த செய்திகள் அனைத்தும் பொய்யானவை என தெரியவந்துள்ளன. மெர்சல் படத்துக்காக அமைக்கப்பட்ட ஹவுஸிங் போர்டு வீடுகள் செட்டில் தான் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாம். இதனால் தளபதி 63 படப்பிடிப்பில் எந்த பாதிப்பும் இல்லை இதன் மூலம் தெரியவந்துள்ளது.