‘வடசென்னை’ படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் ‘அசுரன்’ திரைப்படத்தின் இசை குறித்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ட்வீட் செய்துள்ளார்.

கலைப்புலி எஸ்.தாணுவின் ‘வி கிரியேஷன்ஸ்’ தயாரிப்பில் உருவாகவிருக்கும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்கிறார். எழுத்தாளர் பூமணியின் ‘வெக்கை’ நாவலை தழுவி உருவாகவிருக்கும் இப்படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவிருக்கிறார்.
இப்படத்தின் ஷூட்டிங் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறுகிய காலத்திற்குள் ஷூட்டிங் பணிகளை முடித்து படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
‘பொல்லாதவன்’, ‘மயக்கம் என்ன’, ‘ஆடுகளம்’ திரைப்படங்களை தொடர்ந்து தனுஷ் நடிக்கும் ‘அசுரன்’ திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்நிலையில், இது குறித்து நடிகர் ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அசுரன் படத்தின் இசை பணிகள் நடைபெற்று வருகின்றன. சம்திங் ஸ்பெஷல் இருக்கு.. விரைவில் அறிவிப்பு வெளியாகும்’ என ட்வீட் செய்துள்ளார்.
இது ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் 71வது திரைப்படமாகும். வெற்றிக் கூட்டணியான தனுஷ்-வெற்றிமாறன்-ஜி.வி.பிரகாஷின் அசுர கூட்டணி மீது அதிக எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.
#asuran compositions on progress ... wil be something very special ... soon will reveal details ... @dhanushkraja @VetriMaaran #GV71
— G.V.Prakash Kumar (@gvprakash) March 16, 2019