பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர், ஆலியா பட் நடிப்பில் உருவாகியுள்ள ‘பிரம்மாஸ்த்ரா’ திரைப்படத்தில் தமிழ் லோகோவை நடிகர்கள் சூர்யா மற்றும் தனுஷ் ஆகியோர் வெளியிட்டனர்.

இயக்குநர் அயன் முகர்ஜி இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் அமிதாப் பச்சன் , ரன்பீர் கபூர், அலியா பாட் , மௌனி ராய் , நாகர்ஜுனா அக்கினேனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கடந்த மார்ச்.4ம் தேதி மகா சிவராத்திரியை முன்னிட்டு கும்பமேலாவில் பிரம்மாஸ்த்ரா திரைப்படத்தின் பிரம்மாண்டமான லோகோ வெளியிடப்பட்டது. புதிய முயற்சியாக வானில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட டைட்டில் லோகோ வெளியாகி பார்வையாளர்களை கவர்ந்தது.
இந்நிலையில், இப்படத்தின் தெலுங்கு லோகோவை பிரம்மாண்ட ‘பாகுபலி’ படத்தின் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலியும், நடிகர் ராணா டகுபடியும் வெளியிட்டனர். அதைத் தொடர்ந்து இப்படத்தின் தமிழ் லோகோவை நடிகர்கள் சூர்யா மற்றும் தனுஷ் ஆகியோர் வெளியிட்டனர்.
பிரம்மாண்ட பொருட் செலவில் தர்மா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படம் 3 பாகங்களாக உருவாகி வருகின்றது குறிப்பிடத்தக்கது.
Glad to present to you the official #Brahmastra movie logo in Tamil https://t.co/rddiyyPIFy Best of luck #AyanMukerji @karanjohar @BrahmastraFilm
— Dhanush (@dhanushkraja) March 11, 2019