‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிக்கவிருக்கும் அடுத்த திரைபப்டம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிரபல இயக்குநர் சந்தான பாரதியின் மகனும், இயக்குநருமான சஞ்சய் பாரதி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்கவிருக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘தனுசு ராசி நேரயர்களே’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
ஆட்டோமொபைல் வேலை பார்க்கும் இளைஞனாக நடிக்கும் ஹரிஷ் கல்யாண், ஜாதகத்தில் நம்பிக்கை உள்ளவராக நடிக்கிறார். ‘பியார் பிரேமா காதல்’, ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படங்களை போல், இந்த திரைப்படம் காதல் திரைப்படம் இல்லை என்றும், ஃபேமிலி எண்டர்டெய்னர் படமாக இருக்கும் என்றும் படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்தில் முனிஷ்காந்த், ரேணுகா ஆகியோர் துணை கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
With all your love and support, Im very happy & excited to announce the title of my next film. Here it is #DhanusuRaasiNeyargale#DRNTHEFILM @isanjaybharathi @GhibranOfficial @Gokulam_Movies Will definitely give our best. Love you all ❤️😘 pic.twitter.com/uER0ywG0Va
— Harish kalyan (@iamharishkalyan) April 7, 2019