இந்த சூப்பர்ஹிட் பாலிவுட் படத்தை ரீமேக் செய்யும் தனுஷ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாலிவுட்டில் சூப்பர் டூப்பர் ஹிட்டான த்ரில்லர் திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய நடிகர் தனுஷ் திட்டமிட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

Dhanush to remake Ayushmaan Khurrana's super hit flick Andhadhun in Tamil

நடிகர் தனுஷ் நடித்த சர்வதேச திரைப்படமான ‘தி எக்ஸ்ட்ரானரி ஜெர்னி ஆஃப் தி ஃபகிர்’ திரைப்படம் ‘பக்கிரி’ என்ற தலைப்பில் தமிழில் வெளியாகவுள்ளது. கென் ஸ்காட் இயக்கத்தில் உருவான இப்படம் பல்வேறு நாடுகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இப்படம் வரும் ஜூன் 21ம் தேதி இந்தியாவில் ரிலீசாகவுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று (ஜூன்.5) மும்பையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற நடிகர் தனுஷ் தனது அடுத்த பாலிவுட் திரைப்படம் குறித்த அறிவிப்பினை வெளியிட்டார். இதனை தொடர்ந்து ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், பாலிவுட்டில் நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘அந்தாதுன்’ படத்தினை தமிழில் ரீமேக் செய்ய விரும்புவதாக தனுஷ் தெரிவித்துள்ளார்.

ஆயுஷ்மான் குர்ரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்டோர் நடித்த ‘அந்தாதுன்’ திரைப்படம், பார்வையற்ற ஒரு பியானோ கலைஞரின் கண்முன் நிகழ்ந்த கொலையை பற்றிய கதைக்களத்துடன் சஸ்பன்ஸ் த்ரில்லர் படமாக வெளியானது. வசூல் மற்றும் விமர்சன ரீதியாக இப்படம் அமோக வரவேற்பை பெற்றது.

இப்படத்தை தமிழில் ரீமேக் செய்வது குறித்து பேசிய தனுஷ், ‘அந்தாதுன், மிகச்சிறந்த த்ரில்லர் படம். ஏற்கனவே அதன் தமிழ் ரீமேக் உரிமத்தை பெறும் முயற்சியை தொடங்கிவிட்டோம். இப்படி ஒரு த்ரில்லர் படத்தை தமிழில் நான் ரீமேக் செய்வது பற்றி யோசிக்கவே தேவையில்லை’ என கூறியுள்ளார். ‘அந்தாதுன்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் தனுஷே நடிப்பாரா அல்லது தயாரிப்பாரா என்பன குறித்த கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.