இயக்குநர் சுசீந்திரன் இயகக்த்தில் நடிகர் சசிக்குமார், இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ள ‘கென்னடி கிளப்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
நல்லுசாமி பிக்சர்ஸ் தாய் சரவணன் தயாரிப்பில் பெண்கள் கபடியை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘கென்னடி கிளப்’ திரைப்படத்தில் இயக்குநர் பாரதிராஜா, சசிக்குமார், சமுத்திரக்கனி, மீனாட்சி, சூரி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில், தமிழகத்திலேயே சிறந்த கபடி குழுவான ‘வெண்ணிலா கபடி குழு’-வில் இருந்து 7 கபடி வீராங்கனைகளும் நடித்துள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் டீசரை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு அந்தோனி படத்தொகுப்பும், டி.இமான் இசையும் அமைத்துள்ளார். விரைவில் இப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கில்லி ஸ்டைலில் சொல்லி அடிக்கும் கென்னடி கிளப் டீம்- டீசர் வீடியோ வீடியோ