நீண்ட இடைவேளைக்கு பிறகு பார்த்திபன் இயக்கி நடித்திருக்கும் படம் 'ஒத்த செருப்பு'. இந்த படத்தில் பார்த்திபன் மட்டுமே நடித்துள்ளார். வேறு நடிகர்கள் யாரும் இந்த படத்தில் நடிக்கவல்லை.

இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் டீஸர் மற்றும் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.
மேலும் இந்த படத்தில் இருந்து குளிருதா புள்ள என்கிற பாடல் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. விவேக் எழுதியுள்ள இந்த பாடலை சித் ஸ்ரீராம் மற்றும் சங்கீதா கருப்பையா பாடியுள்ளனர்.
தற்போது இந்த படத்தின் ஸ்நீக் பீக் வீடியோ வெளியாகியுள்ளது. அதில், ''அப்படியே குடு குடுனு ஓடுனேன் சார் மசூதிக்கு. அங்க போய் இத கட்டிட்டு வந்தேன். அல்லா தான் சார் என்ன காப்பாத்துனாரு'' என்று வசனம் பேசுகிறார்.
'அல்லா தான் சார் என்ன காப்பாத்துனாரு' - பார்த்திபனின் 'ஒத்த செருப்பு' புரொமோ வீடியோ இதோ வீடியோ