''புதுசா சிங்கர்ஸ் தெரிஞ்சா சொல்லுங்கப்பா'' - தனுஷின் 'அசுரன்' குறித்து ஜி.வி.பிரகாஷ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வெற்றி மாறன் - தனுஷ் நான்காவது முறையாக இணைந்திருக்கும் படம் 'அசுரன்'. இந்த படத்தில் பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் தனுஷிற்கு ஜோடியாக நடிக்கிறார்.

GV Prakash tweets about Dhanush and Vetrimaaran's Asuran Songs

இந்த படம் எழுத்தாளர் பூமணியின் 'வெக்கை' நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகிறது. மேலும் இந்த படத்தில் இயக்குநர் பாலாஜி சக்திவேல், பசுபதி, நடிகர் கருணாஸின் மகன் கென் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இந்த படத்தின் பாடல்கள் குறித்து ஜி.வி.பிரகாஷ் அவ்வப்போது அப்டேட் வழங்கி வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக தனது ட்விட்டர் பக்கத்தில் நல்ல நாட்டுப்புற பாடல்கள் பாடத்தெரிந்தவர்கள், குரல் மாதிரி தெரிஞ்சா இங்கே டாக் பண்ணுங்கள். மேலும்  ஏதாவது புதுப்பாடகர்கள், குரல் மாதிரிகள் இருந்தால் இங்கே சொல்லுங்கள் என்று குறிப்பிட்டு அசுரன் என்று குறிப்பிட்டுள்ளார்.