பிக் பாஸ் வீட்டில் இவங்க எல்லாமா? - தமன்னா சொன்ன ஹவுஸ்மேட் லிஸ்ட் இதோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் பிரபுதேவா, தமன்னா, கோவை சரளா நடித்துள்ள ‘தேவி 2’ திரைப்படம் இன்று (மே.31) உலகம் முழுவதும் ரிலீசாகியுள்ளது. விஜய் இயக்கத்தில் உருவான ‘தேவி’ படத்தின் இரண்டாம் பாகமாக இப்படம் வெளியாகியுள்ளது.

Tamannah likes to invite Shruti, Dhanush, Kajal, Karthi, Vishal to Bigg Boss house

இந்நிலையில், Behindwoods-ன் Personals வித் தாரா நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பேசிய நடிகை தமன்னா பல்வேறு சுவாரஸ்யங்களை பகிர்ந்துக் கொண்டார்.  பிக் பாஸ் நிகழ்ச்சியை நீங்க தொகுத்து வழங்கினா, உங்க ஃபிரெண்ட்ஸ் யாரெல்லாம் பிக் பாஸ் வீட்டிற்கு அனுப்புவீங்க என்ற கேள்விக்கு சிறிதும் யோசிக்காமல், ஸ்ருதிகாசன், காஜல் அகர்வால், தனுஷ், விஷால், கார்த்தி ஆகியோரை அனுப்ப விரும்புவேன் என கூறியுள்ளார்.

மேலும், புரளி, வதந்தி குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த தமன்னா, ‘இல்லாத ஒரு புரளிய கிளப்பிவிடுவாங்க ரொம்ப ஆச்சர்யமாக இருக்கும் குறிப்பா லிங்க்-அப் புரளி தான் யாருய்யா அதுன்னு யோசிக்க தோணும். தன்னை பற்றி தானே வதந்தி கிளப்ப வேண்டும் என்றால் என்ன செய்வீர்கள் என்றதற்கு, ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார் தமன்னா என கூறுவேன்’ என்றார்.

‘நண்பருக்கு வாழ்த்து சொல்ல ஒரு முறை பொக்கே வாங்க கடைக்குச் சென்றேன். அதில் சில தரமான பூக்களை சேருங்கள் என ஓரிரு பூக்களை வைக்க சொன்னேன். பில் போட போனா, ரூ.6000 என்றனர். பூ தானே வாங்கினேன் அதுக்கு இவ்ளோ காசா என்று நினைத்துக் கொண்டு பில்லை கட்டிவிட்டு பொக்கேவை வாங்கிச் சென்றேன்’ என்றார்.

பிக் பாஸ் வீட்டில் இவங்க எல்லாமா? - தமன்னா சொன்ன ஹவுஸ்மேட் லிஸ்ட் இதோ! வீடியோ