நடிகர் தனுஷ் நடிப்பில் ஃபிரான்ஸில் வெளியான சர்வதேச படமான 'தி எக்ஸ்ட்ரானரி ஜெர்னி ஆஃப் தி ஃபகிர்’ திரைப்படம் ‘பக்கிரி’ என்ற தலைப்பில் தமிழில் வெளியாகவுள்ளது. தற்போது இப்படத்தின் தமிழ் டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

ஆங்கிலம் மற்றும் ஃபிரெஞ்சு மொழிகளில் கடந்த ஆண்டு வெளியான இப்படம் பிரான்ஸ் நாட்டில் அமோக வரவேற்பை பெற்றது. கென் ஸ்காட் இயக்கத்தில் உருவான இப்படம் கேன்ஸ் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பார்வையாளர்களின் கவனம் ஈர்த்தது. இப்படத்திற்கு அமித் திரிவேதி இசையும், நிகோலஸ் எறேரா பின்னணி இசையும் அமைத்துள்ளார். மதன் கார்க்கி பாடல் வரிகள் எழுதியுள்ளார்.
இந்நிலையில், இப்படம் தமிழில் ‘பக்கிரி’ என்ற தலைப்பில் வெளியாகவிருக்கும் இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. ஆங்கிலத்தில் எடுக்கப்பட்ட இப்படத்தை தமிழில் டப் செய்து வெளியிடுகின்றனர். இப்படம் வரும் ஜூன்.21ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.
‘இஞ்சி டீ ஒன்னு போட்டு தரவா மாமா..’- தனுஷின் சர்வதேச படத்தின் டிரைலர் வீடியோ