இந்த தனுஷ் படத்தின் டிரெய்லர் குறித்து வெளியான அறிவிப்பு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனுஷ் தற்போது வெற்றி மாறன் இயக்கத்தில் 'அசுரன்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியர், இயக்குநர் பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

Dhanush's The Extraordinary Journey Of The Fakir tamil Version Pakkiri trailer

எழுத்தாளர் பூமணி எழுதிய வெட்கை நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துவருகிறார்.

தற்போது தனுஷ் நடிப்பில் 'தி எக்ஸ்டிரார்டினரி ஜர்னி ஆப் ஃபகிர்' என்ற பிரெஞ்சு படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கடந்த ஆண்டு பிரான்ஸில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படம் தமிழில் 'பக்கிரி' என்கிற பெயரில் வெளியாகவிருக்கிறது. இந்த படத்தின் தமிழ் வெர்ஷனின் டிரெய்லர் குறித்து தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.