தனுஷின் ஜகமே தந்திரம் - இந்த மாசம் மொரட்டு சம்பவம் இருக்கு.! படக்குழுவின் சர்ப்ரைஸ் இது.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனுஷ் நடிக்கும் ஜகமே தந்திரம் படத்தை பற்றிய சர்ப்ரைஸ் அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

தனுஷின் ஜகமே தந்திரம் அப்டேட் | dhanush karthik subburaj santhosh narayanan's jagame thandiram team's post production pic goes viral.

தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஜகமே தந்திரம். கார்த்திக் சுப்புராஜ் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஷ்வர்யா லக்ஷ்மி, கலையரசன், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இத்திரைப்படத்தை சஷிகாந்த் தயாரிக்கிறார்.

இந்நிலையில் இத்திரைப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் வொர்க் நடக்கும் போட்டோவை படக்குழு பகிர்ந்துள்ளது. மேலும் லண்டனில் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் நிறைவடைய போவதாகவும், இந்த மார்ச் மாத இறுதியில் இருந்து படத்தின் ப்ரொமோஷன் ஆரம்பிக்கும் எனவும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து தனுஷ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Entertainment sub editor