அம்மாவோட புடவையில் ஒரு போட்டோ ஷூட்.!! வைரலாகும் தனுஷ் பட நாயகியின் லேட்டஸ்ட் போட்டோஸ்.
முகப்பு > சினிமா செய்திகள்நடிகை ஐஷ்வர்யா லக்ஷ்மி வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.

மலையாளத்தில் மாயநதி படத்தில் நடித்து பிரபலமானவர் ஐஷ்வர்யா லக்ஷ்மி. இதையடுத்து இவர் தமிழில் விஷால் நடித்த ஆக்ஷன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். மேலும் தனுஷின் ஜகமே தந்திரம், மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் ஐஷ்வர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். புடவை அணிந்தபடி, பாரம்பர்ய லுக்கில் இருக்கும் அவரது போட்டோக்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் இந்த போட்டோஷூட் புகைப்படங்களுடன், அதே புடவையில் இருக்கும் தன் அம்மாவின் புகைப்படத்தையும் சேர்த்து, ''அம்மாவின் புடவை'' என அவர் பதிவிட்டுள்ளார்.
Tags : Aishwarya Lekshmi, Dhanush, Jagame Thanthiram