தனுஷ் உருக்கம் - ''செய்தியைக் கேட்டு மனசு உடஞ்சுடுச்சு, அவர் என்கிட்ட சொன்னத மறக்க மாட்டேன்''

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நீண்ட நாட்களாக கேன்சரால் பாதிக்கபட்டிருந்த பிரபல பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் இன்று ( ஏப்ரல் 29 ) மரணமடைந்தார்.  அவருக்கு 54 வயதாவதாக கூறப்படுகிறது.  அவரது மறைவிற்கு பிரபலங்கள், ரசிகர்கள் தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

Actor Dhanush offers his condolences to Irrfan Khan | இர்ஃபான் கான் மரணம் குறித்து நடிகர் தனுஷ் வேதனை

அதன் ஒரு பகுதியாக நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், ''செய்தியைக் கேட்டு என் மனம் உடைந்தது. அவர் திறமையான கலைஞர். நல்ல மனிதரை இழந்து விட்டோம். எப்பொழுதும் அவரது கனிவான வார்த்தைகளை நியாபகம் வைத்திருப்பேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள்'' என்று தெரிவித்துள்ளார்.

.

பாலிவுட், ஹாலிவுட் என தனது யதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர் நடிகர் இர்ஃபான் கான். அவர் நடிப்பில் வெளியான ஹாலிவுட் படங்களான 'ஸ்லம்டாக் மில்லியனர்', 'லைஃப் ஆஃப் பை', 'ஜூராஸிக் பார்க்', 'அமேசிங் ஸ்பைடர் மேன்' ஆகியவை மூலம் உலக அளவில் மிகவும் பரீட்சையமானவர்.

மேலும் பாலிவுட் படங்களான 'லஞ்ச் பாக்ஸ்', 'பான் சிங்', 'தல்வார்', 'சலாம் பாம்பே' உள்ளிட்டவற்றில் தனது தனித்துவமான நடிப்பால் அவர் என்றும் நினைவு கூறப்படுவார். நடிகர் இர்ஃபான் கானின் மறைவிற்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

Entertainment sub editor