ஊரடங்கு போட்டால் என்ன.?, அதான் அப்பாவோட ஜிம் இருக்கே.! - பிரபல ஹீரோவின் மகள் க்யூட் வீடியோ.
முகப்பு > சினிமா செய்திகள்நடிகர் டொவினோ தாமஸ் தனது மகளின் க்யூட் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

மலையாள சினிமாவில் இளம் கதாநாயகனாக கலக்கி வருபவர் டொவினோ தாமஸ். இவர் நடித்த மாயநதி, தீவண்டி, வைரஸ் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் இவர் மோகன்லாலின் சூப்பர் ஹிட் படமான லூசிபர் படத்திலும் தனது நடிப்பால் அசத்தினார். இவர் தமிழில் தனுஷ் நடித்த மாரி-2 படத்தில் வில்லனாக நடித்தார்.
இந்நிலையில் டொவினோ தாமஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு க்யூட் வீடியோவை பதிவிட்டுள்ளார். அவரது மகள் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் இடத்தில், ஜாலியாக ஊஞ்சல் ஆடும் வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார். ஊரடங்கு அவள் கதவுளை மூடிவிட்டதால், இதோ என் ஜிம்முக்குள் நுழைந்து ஊஞ்சல் ஆடி கொண்டிருக்கிறாள் என அவர் பதிவிட்டுள்ளார். டொவினோ தாமஸின் இந்த பதிவு ரசிகர்களை கவர்ந்துள்ளது.
Tags : Tovino Thomas