''தனுஷ் படத்துல நடிக்க வேண்டியது.'' - அவ்வை சண்முகி குழந்தை நட்சத்திரம் அன்னீயின் சீக்ரட்ஸ்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கமலின் அவ்வை சண்முகி படத்தில் குழந்தை நட்சத்திரமாக கலக்கிய அன்னீ மனம் திறந்து பேசியுள்ளார். 

அவ்வை சண்முகி குழந்தை நட்சத்திரம் அன்னீயின் சீக்ரட்ஸ் | kamal's avvai shanmugi child artist annie opens on shooting secrets, dhanush, vijay sethupathy

கமல் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் அவ்வை சண்முகி. மீனா, நாகேஷ், ஜெமினி கணேசன், நாசர், டெல்லி கணேஷ் நடித்த இத்திரைப்படம் நகைச்சுவை பாணியில் உருவாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இத்திரைப்படத்தில் கமலின் மகளாக நடித்த அசத்தியவர்தான் அன்னீ. இத்திரைப்படத்தில் இவரது குறும்பான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 

இந்நிலையில் அன்னீ நம்மிடம் வீடியோ கால் மூலம் மனம் திறந்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, 'அவ்வை சண்முகி படத்தில் நடிக்கும் போது எனக்கு பெரிதாக எந்த விவரமும் தெரியவில்லை. கமல் சார் எவ்வளவு பெரிய ஸ்டார் என்று கூட தெரியாது. நான் செட்டில் ரொம்பவே ஜாலியாக இருப்பேன். நெருப்புடன் நீச்சல் குளத்தில் விழும் காட்சியை என்னால் மறக்கவே முடியாது, சரியான பாதுகாப்புடன் என் மீது நிஜமாகவே தீ வைத்து அந்த காட்சியை எடுத்தார்கள். மேலும் படத்துக்கு மூன்று விதமான முடிவுகள் படமாக்கப்பட்டதாகவும்' அன்னீ அவ்வை சண்முகி மெமரீஸை பகிர்ந்து கொண்டார். 

மேலும் ''தனுஷின் ஆடுகளம் படத்தில் நடிப்பதற்காக என்னை அனுகினார்கள். ஆனால் எனக்கு அப்போது படிப்பு இருந்ததால், அது நடக்க முடியாமல் போய்விட்டது'' என தெரிவித்த அன்னீ, தமிழில் யாருடன் நடிக்க விருப்பம் என கேட்டதற்கு, உடனடியாக விஜய் சேதுபதி என பதிலளித்தார்.  

''தனுஷ் படத்துல நடிக்க வேண்டியது.'' - அவ்வை சண்முகி குழந்தை நட்சத்திரம் அன்னீயின் சீக்ரட்ஸ். வீடியோ

Entertainment sub editor