"விஜய் அண்ணா தர லோக்கல்.. அனிருத் ப்ரோ நீங்க.." - மாஸ்டர் 'வாத்தி' பாடல்...ஷாந்தனு 'மாஸ்' ட்விட்..!!
முகப்பு > சினிமா செய்திகள்லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் படம் 'மாஸ்டர்'. இதில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கிறார். மேலும் இவர்களுடன் இந்த படத்தில் சாந்தனு, ஆண்ட்ரியா, சிம்ரன், கைதி வில்லன் அர்ஜுன் தாஸ், நாகேந்திர பிரசாத், ரமேஷ் திலக் என ஒரு பெரிய நடிகர் பட்டாளமே நடிக்கிறது.

இந்நிலையில் கடந்த வாரம் படத்தின் முதல் பாடலான ஒரு குட்டி ஸ்டோரி; வெளியானது. இந்த பாடலை அருண் காமராஜ் எழுதி இருந்தார். பொது மேடைகளில் விஜய் பேசும் பிரபல வசனங்களின் அடிப்படையில் உருவாகி இருந்தது அந்த பாடல். வெளியான சில மணி நேரத்துக்குள் மில்லியன் கணக்கில் ரசிகர்கள் அதனைப் பார்த்து கொண்டாடினார். நம்பர் 1 டிரெண்டிங்கில் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது
முக்கியமாக பாடலில் இடம் பெற்றிருந்த அனிமேஷன் காட்சிகள் வேற லெவலில் இருந்தன. இதுவரை வந்த விஜய் பாடல்களில் இது மிகவும் வித்தியாசமான விதத்தில் உருவாக்கபட்டிருந்தது. கேட்கும் போதே ஒரு செம எனர்ஜி கிடைத்தது. இப்படியிருக்க விஜய் ரசிகர்களைப் பற்றி சொல்லவா வேண்டும். ட்விட்டரை கிழித்து தொங்க விட்டார்கள். உலக அளவில் ட்ரெண்ட் ஆனது குட்டி ஸ்டோரி.
இந்நிலையில் படத்தின் செகண்ட் சிங்கிள் இன்று (மார்ச் 10) ரிலீஸ் ஆக உள்ளது. இந்த பாடலுக்கு 'வாத்தி' என்று நக்கல் நய்யாண்டித்தனமாக பேர் வைத்திருக்கிறார்கள். உடனே விஜய் ரசிகர்கள் #Mastersecondsingle ட்ரெண்ட் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். இந்த அப்படத்தில் நடிக்கும் ஷாந்தனு சமீபத்தில் ட்விட் செய்துள்ளார். அதில் அவர்
"முதல் முறையாக விஜய் அண்ணா டான்ஸ் ஆடுவதை நேரில் பார்த்தேன். மரண லெவல் எனர்ஜி, அவர் ஆடி முடித்ததும் செட்டில் எல்லாரும் கைத்தட்டினோம்... இது ஒரு 'தர லோக்கல்' பாட்டு...அனிருத் ப்ரோ பிரிச்சிட்டீங்க" என்று உற்சாகம் பொங்க கூறியுள்ளார். இதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் கூடி இருக்கிறது.
Watchin Vijay anna dance live for the 1st time💛marana energy&charisma,Humongous claps after d shot🔥a “thara local” number in #Master #MasterSecondSingle tom 5pm@anirudhofficial bro piruchiteenga 🔥🔥🔥
Was waiting to put this hashtag from day 1shoot 🔥🤩#வாத்திகம்மிங்ஒத்தே pic.twitter.com/RbFXRWifUa
— Shanthnu 🌟 ஷாந்தனு Buddy (@imKBRshanthnu) March 9, 2020