’பொன்னியின் செல்வன்’ நடிகையின் பெர்சனல் புகைப்படம் வைரல்… தாயின் ஸ்டைலில் மகள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

2017ம் ஆண்டு மலையாள படம் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானவர் நடிகை ஐஷ்வர்யா லக்‌ஷ்மி. அதே ஆண்டு டோவினோ தாமசுடன் அவர் நடித்து வெளியான மாயநதி திரைப்படம் அவருக்கு பாராட்டுகளை பெற்றுத்தந்தது.

தொடர்ந்து ஃபகத் ஃபாசில், பிருத்திவிராஜ் என்று முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த அவர் விஷால் நடித்த ஆக்‌ஷன் படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். திரையுலகில் அவருக்கு அடுத்தடுத்து கிடைத்த வாய்ப்பு அவரது நட்சத்திர அந்தஸ்தை உயர்த்தும் வண்ணமே அமைந்தது.

தனுஷின் ‘ஜகமே தந்திரம்’, மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ ஆகிய படங்களில் அவர் முக்கிய ரோல்களில் நடிக்கிறார். தற்போது கொரோனா நோய் உலகெங்கும் பரவி அனைத்து தொழில்களும் முடங்கிவுள்ளதால் பிரபலங்கள் சமூக ஊடகத்தில் ஆக்டிவாகி உள்ளனர்.

இந்நிலையில், ஐஷ்வர்யா லக்‌ஷ்மி ஒரு விளம்பரப்படத்துக்காக எடுத்த புகைப்படத்தை தன் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இதையடுத்து அவரைப்போலவே அவர் தாய் உடை அணிந்திருக்கும் பழைய புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டிருந்தார். இந்த புகைப்படம் இப்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Also .. Ammas saree ♥️

A post shared by Aishwarya Lekshmi (@aishu__) on

Entertainment sub editor