புதுப்பேட்டை-2 எப்படி இருக்க போகுது - பல தகவல்களை பகிர்ந்த செல்வராகவன் Exclusive Video.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் செல்வராகவன் புதுப்பேட்டை-2 உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து நம்மிடம் பகிர்ந்து கொண்டார். 

புதுப்பேட்டை-2 செல்வராகவன் செம தகவல் | director selvaraghavan opens on dhanush's pudhupettai 2 and ayirathil oruvan shoot experience

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநராக இருப்பவர் செல்வராகவன். இவரது புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்கள் காலங்கள் கடந்து கொண்டாடப்படுகின்றது. இவர் கடைசியாக சூர்யாவை வைத்து என்.ஜி.கே படத்தை இயக்கினார். மேலும் இவரது இயக்கத்தில் உருவான நெஞ்சம் மறப்பதில்லை ரிலீஸுக்காக காத்திருக்கிறது. 

இந்நிலையில் இயக்குநர் செல்வராகவன் நம்மிடம், வீட்டில் இருந்தபடி வீடியோ காலில் உரையாடினார். அப்போது அவர் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். குறிப்பாக புதுப்பேட்டை படம் குறித்து, அதில் தனுஷ் எப்படி கஷ்டப்பட்டு நடித்தார் என்பதையும் அவர் பகிர்ந்து கொண்டார். மேலும் ஆயிரத்தில் ஒருவன் படப்பிடிப்பின் போது, ஒரு க்ளாஸ் தண்ணீருக்காக அனைவரும் க்யூவில் நின்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகம் குறித்து பேசிய அவர், இதுவரை எழுதியதிலேயே புதுப்பேட்டை-2 தான் மிகவும் சவாலான ஸ்க்ரிப்ட் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் தனது அடுத்த படம் இதுதானா என இப்போது சொல்ல முடியாது, மேலும் இது புதுப்பேட்டை படத்தை தொடர்ந்து வரும் கதையா, அல்லது அதற்கு முன்பு நடக்கும் கதையா என்பது இனிமேல்தான் முடிவு செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார். 

 

புதுப்பேட்டை-2 எப்படி இருக்க போகுது - பல தகவல்களை பகிர்ந்த செல்வராகவன் EXCLUSIVE VIDEO. வீடியோ

Entertainment sub editor