‘பேசுற அளவுக்கு கேக்கவும் வேணும்..’ - வனிதாவின் குற்றச்சாட்டுகளுக்கு கமல் நறுக் பதில்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இந்த வாரம் முழுவதும் நடந்த சம்பவங்கள், சண்டைகள் பற்றி இன்றும், நாளையும் கமல்ஹாசன் அலசவிருக்கிறார்.

Kamal Haasan has given a befitting reply to Vanitha's allegations on Abhirami

பிக் பாஸ் சீசன் 3-ல் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களின் உண்மை சுயரூபங்கள் நாளுக்கு நாள் வெளி வந்துக் கொண்டிருக்கிறது. சென்ற வார இறுதியில் ஃபாத்திமா பாபு வெளியேற்றப்பட்டார்.

இந்த வாரம் எலிமினேஷனுக்கு மோகன் வைத்தியா, வனிதா, மதுமிதா, மீரா, சரவணன் ஆகியோர் நாமினேட் ஆகியுள்ளனர். இவர்களில் இருந்து ஒருவர் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது புரொமோ வெளியாகியுள்ளது. அதில், வனிதாவிடம் அபிராமியின் கேப்டன்ஷிப் பற்றி கமல்ஹாசன் கேட்டறிகிறார். அப்போது கமலிட பேசிய வனிதா, நிஜமாக இது தான் அபிராமியின் உண்மையான கேரக்டரா? இந்த ஒரு கண்டென்ட், ஒரு அட்டென்ஷனுக்காக இப்படி பண்ணுகிறாரா? என தோன்றுவதாக கூறினார்.

இடைமறித்து பேசிய கமல்ஹாசன், வேறு ஒருத்தருக்கு அட்டென்ஷன் போய்விடும் என்ற எண்ணம் உங்கள் பேச்சில் இருப்பதாக எனக்கு தெரிகிறது. ஒரு குரல் மட்டுமே ஒலிக்கக் கூடாது.. தான் பேசும் அளவிற்கு கேட்கவும் வேண்டும் என கமல் தன் பாணியில் நறுக் கொட்டு வைத்தார்.

ஆகவே இன்றைய நிகழ்ச்சியில் தரமான சம்பவம் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

‘பேசுற அளவுக்கு கேக்கவும் வேணும்..’ - வனிதாவின் குற்றச்சாட்டுகளுக்கு கமல் நறுக் பதில் வீடியோ