“வாரத்துல 2 நாளு வருவாரு.. வந்தார்னா டார் டாரா கிழிப்பாரு..”- பிக் பாஸ் வீட்டில் சாண்டி சேட்டை
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Jul 13, 2019 09:13 PM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் இந்த வாரத்திற்கான எபிசோட் இன்று ஒளிபரப்பாகவுள்ளது.

முதல் இரண்டு சீசன்களை போல், இந்த மூன்றாவது சீசனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். கடண்டஹ் ஜூன்.23ம் தேதி 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் 3 சீசனில் முதலாவதாக ஃபாத்திமா பாபு வெளியேறினார். அதைத் தொடர்ந்து இந்த வாரம் எலிமினேஷனுக்கு வனிதா, சரவணன், மோகன் வைத்தியா, மீரா, மதுமிதா ஆகியோர் நாமினேட் ஆகியுள்ளனர்.
இவர்களில் ஒருவர் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த வாரம் அபிராமியின் கேப்டன்ஷிப்பில் பிக் பாஸ் வீட்டிற்குள் நடந்த பல சண்டைகள், சுவாரஸ்யங்கள் பற்றி கலம்ஹாசன் இன்று அலசுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
வெறும், சண்டை, காதல், புறம்பேசுவது என போய்க் கொண்டிருக்கும் பிக் பாஸ் வீட்டில் இன்றைய நிகழ்ச்சியில் சாண்டி மாஸ்டர் தனது கலக்கல் வித்தைகளை அவுத்துவிட்டிருக்கிறார். கமல்ஹாசனின் பாடல்களுக்கு சாண்டி மாஸ்டரின் கொரியோவில் கவின், சாண்டி மாஸ்டர் செய்துள்ள Performance கொண்ட புதிய புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.
அந்த வீடியோயில், ‘உலகநாயகன் வராரு ஒத்திக்கோ ஒத்திக்கோ.. வாய கொஞ்சம் நீயும் தான் பொத்திக்கோ..! வாரத்துல ரெண்டு நாளு வருவாரு.. அவரு வந்தார்னா டார் டாரா கிழிப்பாரு..ஆழ்வர்பேட்டை ஆண்டவா.. த்ரிஷ்டி சுத்தி போடவா.? இந்த வீட்டு உள்ள வா.. வா.. கண்ணே கலைமானே.. நினைத்தேன் உன்னை நானே.. நடுவுல மானே தேனே போட்டுக்கோ..’ என கலாட்டா பண்ணும் காமெடி புரொமோ வெளியாகியுள்ளது.
“வாரத்துல 2 நாளு வருவாரு.. வந்தார்னா டார் டாரா கிழிப்பாரு..”- பிக் பாஸ் வீட்டில் சாண்டி சேட்டை வீடியோ