‘இம்முறை இன்றேவா..? சாண்டி கையில் எலிமினேஷன் கார்டு!’ - இந்த வார விக்கெட் இவரா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இந்த வாரத்துக்கான எலிமினேஷன் வார இறுதி நாளான இன்று நடைபெறுகிறது.

Kamal Haasan Pranks Housemates that elimination is happening today, Mohan Vaidhya saved from Eviction this week

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சி 16 போட்டியாளர்களுடன் தொடங்கி கடந்த 20 நாட்களாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களின் பங்களிப்பை பொறுத்தே ஒவ்வொரு வாரமும் எவிக்‌ஷன் நாமினேஷன் நடத்தப்படுகிறது. அதன்படி முதல் வாரத்தில் ஃபாத்திமா பாபு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

அவரைத் தொடர்ந்து இந்த வாரம் மோகன் வைத்தியா, வனிதா, மதுமிதா, மீரா, சரவணன் ஆகிய 5 பேர் எலிமினேஷனுக்கு நாமினேட் ஆகியுள்ளனர். இவர்களில் இருந்து ஒருவர் இன்று பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேறுவார். இந்நிலையில், நேற்றைய நிகழ்ச்சியில் எலிமினேஷன் Prank ஒன்று நடத்தப்பட்டது.

வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் எவிக்‌ஷனை முன்கூட்டியே அதுவும், வித்தியாசமாக போட்டியாளரே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போகும் நபரின் பெயரை கூறுவார் என்று கமல்ஹாசன் ட்விஸ்ட் வைத்தார். அதன்படி, சாண்டி கையில் எவிக்‌ஷன் கார்டு கொடுக்கப்பட்டது. அதில் இருந்த பெயர், நைனா என்று செல்லமாக அழைப்பெறும் மோகன் வைத்தியா. அதைப் பார்த்ததும், விளையாட்டில் அவுட்டான பச்சக்குழந்தை போல் மோகன் வைத்தியா தேம்பி தேம்பி அழுதுக் கொண்டு அனைத்து போட்டியாளர்களை கட்டிப்பிடித்து முத்தமிட்டு விடைபெற தயாரானார்.

சில நிமிட சோகம், அழுகை, முத்தங்களுக்கு இடையே, கமல்ஹாசன் இது  Prank என்றும், இந்த வார நாமினேஷனில் இருந்து மோகன் வைத்தியா காப்பாற்றப்படுகிறார் என்பதையும் கூறினார். ஆக, வனிதா, மீரா, மதுமிதா, சரவணன் ஆகிய 4 பேரில் ஒருவர் பிக் பாஸ் வீட்டை விட்டு இன்று வெளியேறுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.