‘மைனம்மா... லொஸ்லியா சொன்ன குட்டி கதை..!’- இதுல இருந்து சொல்ல வருவது என்னவென்றால்..!
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Jul 14, 2019 12:03 AM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி 20 நாட்களை கடந்துள்ள நிலையில், வீட்டில் இருக்கும் ஹவுஸ்மேட்ஸ்களின் உண்மை முகங்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கிறது.

16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த சீசனில் முதலாவதாக ஃபாத்திமா பாபு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். அதைத் தொடர்ந்து இந்த வார இறுதியில், இதுவரை பிக் பாஸ் வீட்டில் நடந்த பல விஷயங்களை கமல்ஹாசன் அலசியதுடன், ஹவுஸ்மேட்ஸின் தவறுகளை சுட்டிக் காட்டியும், துணிச்சலாக செயல்பட்டதை பாராட்டியும் பேசினார்.
அப்போது, பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஃபாத்திமா பாபு சொன்னதையடுத்து, கமல் கேட்டுக் கொண்டதன் பேரில் லொஸ்லியா தனது வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை கதையாக பகிர்ந்துக் கொண்டார்.
லொஸ்லியா கூறிய மைனம்மா கதையில், அவர் சிறுவயதில் அக்காவுடன் விளையாடிக் கொண்டிருந்த போது, ஒருவர் மைனா குஞ்சு வளர்ப்பதை பார்த்து ஆசைப்பட்டு, மைனா குஞ்சை பார்க்கச் சென்றாராம். குட்டியாக ரெக்கை கூட முளைக்காத மைனா குஞ்சை முதலில் கையில் வாங்குபவர் மீதே அது பாசமாக இருக்கும் என்ற போது அதனை லொஸ்லியாவின் அக்கா வாங்கிக் கொண்டாராம்.
ஆனால், அந்த மைனா குஞ்சுக்கு லொஸ்லியா மீது அப்படி ஒரு பாசமாம். லொஸ்லியா பள்ளிக்குச் சென்றாலும், எங்கு சென்றாலும் கூடவே பறந்து வருமாம். லொஸ்லியா அந்த மைனா குஞ்சை 6 வருடங்களாக ஒரு குழந்தை போல் வளர்த்தியிருக்கிறார். ஆனால், எதிர்ப்பாராத விதமாக லொஸ்லியாவின் வீட்டில் கட்டிடப்பணி நடந்ததால், அவர்கள் வேறு இடத்திற்கு சென்றுவிட்டார்கலாம்.
புதிய இடத்தை விரும்பாத மைனா, பழைய வீட்டிலேயே இருந்ததாம், பள்ளி முடிந்து வீடு வரும்போது எப்போதும் தனது மைனாவிற்கு சாப்பாடு கொடுத்துவிட்டு வருவாராம் லொஸ்லியா. ஒரு நாள் அப்படிச் சென்றபோது மைனாவை காணவில்லையாம். இதனால் கடும் கவலையில் இருந்த லொஸ்லியாவை அவரது தந்தை, மைனா பறந்து போயிருக்கும் என சமாதானம் செய்தாராம்.
ஆனால் இரட்னு நாட்களுக்கு பிறகு தான் பக்கத்து வீட்டில் இருக்கும் புத்தி சுவாதினம் இல்லாத சிறுவன், மைனா கொத்தும் என்பதால் இரும்பு கம்பியால் அடித்ததில், மைனா இறந்துவிட்டதாம். இது தனது வாழ்வில் நேர்ந்த மிகப்பெரிய இழப்பு என்பதை லொஸ்லியா பகிர்ந்துக் கொண்டார்.
இந்த கதையின் மூலம், பரஸ்பரம் ஒருவர் மீது அன்பு செலுத்தினால் என்ன நடக்கும் என்பதையும், ஒருவர் மீது நாம் காட்டும் விருப்பும், வெறுப்பும் மற்றவர் வாழ்க்கையில் எத்தனை பெரிய சோகத்தையும், இழப்பையும் ஏற்படுத்தும் என்பதற்கு லொஸ்லியாவின் மைனம்மா கதை ஒரு உதாரணம் என கமல்ஹாசன் தனது கருத்தையும் பகிர்ந்துக் கொண்டார்.