''ஆமிர்கானுடன்... விரைவில் தகவல் வரும்'' - பார்த்திபன் சூசகம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நடன இயக்குநர் பாபா பாஸ்கர் இயக்குநராக அறிமுகமாகும் படம் 'குப்பத்து ராஜா'. இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்க பார்த்திபன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

Parthiban speaks about Aamir Khan in GV Prakash's Kuppathu Raja press meet

இந்த படம் வருகிற ஏப்ரல் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தின் பிரஸ்மீட் சமீபத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய பார்த்திபன், 'நான் 'புதிய பாதை' என்ற படத்தை இயக்கினேன். ஆனால் நான் பிறந்து வளர்ந்த விதத்திற்கும் ஸ்லம்மிற்கும் துளியும் சம்பந்தமில்லை.  இந்த படத்தில் நான் செய்திருக்கும் கேரக்டர் நல்லவன். அதற்கான காட்சிகள் படத்தில் இருக்கிறது.

ஆனால் என்னை நம்பியாரா பார்க்கிறது எப்படி என்றால் ? எம்ஜிஆரே எத்தனையோ பேருக்கு வில்லனா இருந்திருக்கிறார். திமுகவிற்கு எம்ஜிஆர் எவ்வளவு பெரிய வில்லனா இருந்திருக்கிறார். அதே மாதிரி என்னை வில்லனா பார்க்கிறது யாருனா ஜி.வி.பிரகாஷ் தான். அவருக்கு மட்டும் தான் வில்லனா தெரிவேன். ஆனால் இந்த படத்தில் நான் ஏற்றிருக்கும் வேடம் நல்லவன் தான்.

ஜி.வி.பிரகாஷுடன் நான் நடிக்கும் முதல் படம் இது. 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் வானளவுக்கு உயரத்தில் இருக்கும் அவரது இசைத் திறமையை பார்த்து நான் வியந்திருக்கிறேன். இவ்வளவு சின்ன வயசுல இவ்வளவு பெரிய இசை ஞானமா என்று மிரண்டு போயிருக்கேன் என்றார்.

மேடையில் பேசிக்கொண்டிருக்கும் போது பார்த்திபனின் செல்போனில் ஒரு அழைப்பு வந்தது. இது குறித்து பேசிய பார்த்திபன், நான் நேற்று ஆமிர்கானுக்கு ஒரு மெசேஜ் அனுப்பினேன். அப்போது இன்று அழைப்பதாக கூறியிருந்தார். அது எதற்காக என்று இப்போது கூற மாட்டேன் . விரைவில் தகவல் வரும். என்றார்.

''ஆமிர்கானுடன்... விரைவில் தகவல் வரும்'' - பார்த்திபன் சூசகம் வீடியோ