'எம்ஜிஆருக்கும் கமலுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்' - பார்த்திபன் கலகல பேச்சு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நீண்ட இடைவேளைக்கு பிறகு இயக்குநர் பார்த்திபன் இயக்கி நடித்திருக்கும் படம் 'ஒத்த செருப்பு'. இந்த படத்துக்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்ய , சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்துக்கு விவேக் பாடல்கள் எழுதியுள்ளார்.

Parthiepan Speaks Difference between MGR and Kamal Haasan in Otha Seruppu Audio Launch

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மே 19 அன்று நடைபெற்றது. இந்த விழாவில், கே.பாக்யராஜ், உலகநாயகன் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் ஆகியோர் கலந்துகொண்டு இயக்குநர் பார்த்திபனுக்கு பாராட்டுகள் தெரிவித்தனர்.

பின்னர் விழாவில் பேசிய பார்த்திபன்,  சரித்திர உண்மைகளை சொன்னா ஒத்துக்கிறது இல்ல. சரித்திர உண்மைகளை மட்டுமல்ல, பூகோள உண்மைகளை சொன்னா கூட ஒத்துக்கிற மாட்டாங்க. பூமி உருண்டைனு சொன்னத கூட லேட்டாதான் ஒத்துக்கிட்டாங்க.

எம்ஜிஆருக்கும், உலகநாயகன் கமல்ஹாசனுக்கும் உள்ள வித்தியாசம் குறித்து என்ன தெரியுமா ?  ஓடி வந்து கதாநாயகியோட ஒதட்ட கடிச்சா அது கமல். ஓடி வந்து தன்னுடைய உதட்டையே கடிச்சுகிட்டா அது கமல்' என்று கலகலப்பாக பேசினார்.

'எம்ஜிஆருக்கும் கமலுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்' - பார்த்திபன் கலகல பேச்சு வீடியோ