“ஒரு செருப்பு வந்துடுச்சு, இன்னொன்னு..”- செருப்பு சர்ச்சை குறித்து கமல் கலாய் பேச்சு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகரும், அரசியல் கட்சி தலைவருமான கமல்ஹாசன், தன் மீது செருப்பு வீசப்பட்ட சர்ச்சைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசியுள்ளார்.

Kamal Haasan speech on Slipper controversy in Parthiban's Otha Seruppu Audio Launch

நடிகர் பார்த்திபன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், ஷங்கர், லிங்குசாமி, கே.பாக்யராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துக் கொண்டனர். இதில் பேசிய கமல்ஹாசன், தன் மீது செருப்பு வீசப்பட்டது குறித்தும், மகத்மா காந்தியின் வரலாற்று நிகழ்வையும் சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.

அவர் பேசுகையில், ஹேராம் படத்திற்காக ஆராய்ச்சி செய்தபோது, காந்தியின் கண்ணாடி மற்றும் செருப்பு பற்றிய வரிகளை படித்தேன். அதில் ஒருமுறை காந்தி ரயிலில் சென்றபோது அவரது ஒரு செருப்பு தவறி விழுந்துவிட்டது. உடனே அவர் மற்றொரு செருப்பையும் கழறி வீசிவிட்டார். ஏன் என கேட்டதற்கு ரு செருப்பு இருந்தால் யாருக்கும் உபயோகம் இல்லை என்றார். அவரின் ரசிகன் நான்.

அவர் போட்ட செருப்பில் ஒன்று வந்து சேர்ந்துவிட்டது. இன்னொன்றும் வரும். அதற்கான அருகதை எனக்கு உண்டு. அதற்காக காத்திருக்கிறேன். என் மேல் செருப்பு வீசியதை பலரும் பயந்து பயந்து பேசுகின்றனர். இதில் ஒரு பயமும் இல்லை. செருப்பு போட்டவருக்கே அவமானம் என கூறினார்.

கடந்த சில நாட்களுக்கு முன் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து, அவரது பெயர் நாதுராம் கோட்சே என கூறியிருந்தார். கமல்ஹாசனின் இந்த சர்ச்சை கருத்துக்கு நாடு முழுவதும் கண்டனம் எழுந்தது. அதைத் தொடர்ந்து அவர் கலந்துக் கொண்ட மற்றொரு பிரச்சார கூட்டத்தில் கமல்ஹாசன் வந்த வாகனத்தின் மீது செருப்பு மற்றும் கற்கள் வீசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

“ஒரு செருப்பு வந்துடுச்சு, இன்னொன்னு..”- செருப்பு சர்ச்சை குறித்து கமல் கலாய் பேச்சு வீடியோ