பயாஸ்கோப் ஃபிலிம் ஃபிரேம்ஸ் பேனரின் கீழ் பார்த்திபன் இயக்கி, தயாரித்து, நடித்த ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

நடிகர் பார்த்திபனே முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஆர்.சுதர்ஷன் படத்தொகுப்பும், ரசூல் பூக்குட்டி ஒலிப்பதிவும் செய்துள்ளனர். இந்நிலையில், இன்று நடைபெற்ற இப்படத்தில் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், ஷங்கர், லிங்குசாமி, கே.பாக்யராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.
அதில் கலந்துக் கொண்டு பேசிய நடிகர் கமல்ஹாசன், “நட்சத்திர தொல்லை இல்லாததால் புரொடக்ஷன் நல்ல விதமாக நடந்திருக்கும். நான் அதற்காக தான் தயாரிப்பாளரானேன். ஹீரோ என் பாக்கெட்டில். சொன்ன படியெல்லாம் கேட்பான், இல்லையென்றால் உனக்கு தான் வட்டி ஏறும் என சொல்லிவிடுவேன்".
"ஹீரோவை என் பாக்கெட்டில் வைத்துக் கொண்டால் நினைத்தபோதெல்லாம் அவரை நடிக்க வைக்க முடியும். அதற்காகவே தயாரிப்பாளரானேன். புரொடக்ஷனில் நட்சத்திரங்களால் ஏற்படும் தாமதமும், ஒரு சில ஈகோவால் ஏற்படும் தாமதங்களையும் பார்த்து எனக்கு வயிறு எறியும்" என கூறினார்.
“அதையெல்லாம் பார்த்து வயிறு எறியும்”- கமல்ஹாசன் வீடியோ