நீண்ட இடைவேளைக்கு பிறகு இயக்குநர் பார்த்திபன் இயக்கி நடித்திருக்கும் படம் 'ஒத்த செருப்பு'. இந்த படத்துக்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்ய , சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்துக்கு விவேக் பாடல்கள் எழுதியுள்ளார்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மே 19 அன்று நடைபெற்றது. இந்த விழாவில், கே.பாக்யராஜ், உலகநாயகன் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் ஆகியோர் கலந்துகொண்டு இயக்குநர் பார்த்திபனுக்கு பாராட்டுகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பார்த்திபனின் ஒத்த செருப்பு குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், ''என்னுடைய அருமை நண்பர் பார்த்திபன், நல்ல படைப்பாளி . நல்ல மனிதர். புதுசுபுதுசா சிந்திக்கக் கூடியவர். அவர் சமீபகாலமாக நிறைய படங்களில் நடிக்கத் தொடங்கியதைப் பார்த்து எனக்கு வருத்தம். ஒரு நல்ல படைப்பாளி. படம் எடுக்காமல் நடிக்கிறாரே என வருத்தப்பட்டேன்.
சமீபத்தில் அவரைச் சந்தித்த போது ௐன் வருத்தத்தைத் தெரிவித்தேன். இப்போ ஒரு படம் டைரக்ட் பண்ணிட்டிருக்கேன் என்று ஒத்த செருப்பு படம் பற்றிச் சொன்னார். இதுவொரு வித்தியாசமான படம். தனி ஒருவர் மட்டும் நடிக்கிற படம்.
நண்பர் இந்த படத்தின் விருதுகளும் வெற்றிகளும் பெறுவார் ஆஸ்கர் முதலான விருதுகள் கிடைக்கவும் வாழ்த்துகள்'' இவ்வாறு அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
'Super' sir
Thank u so so much.
ஆஸ்கார்'என உச்சரிக்கவே
இமய உயரம் வேண்டும் இதயம்!https://t.co/kziD7h2XnY
— R.Parthiban (@rparthiepan) May 19, 2019
ஆஸ்கருக்கு ரஜினி பரிந்துரைக்கும் தமிழ் படம் எது தெரியுமா? வீடியோ